இந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே தற்போது அதிகம் பேசப்பட்டு வந்த செய்தி வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றிதான். ஆனால் தமிழ் சினிமவில்லும் தமிழ் திரையுலகிலும் இதனை பற்றிய பேச்சுக்களே வரவில்லை என்று சூரினால் அப்படியெல்லாம் இல்லை இங்கும் ரசிகர்களும் இணைய வாசிகளும் இந்த வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றி இணையத்தில் பல விமர்சனங்களை தெரிவித்தனர். அதே போல தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் இப்படி வாரிசு நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான்.

இப்படி வாரிசு நடிகர்களாக மட்டும் இல்லாமல் சினிமாவில் பல துறையிலும் இருந்து வந்தவர்ர்களில் இசைஞானி இளையராஜாவின் வாரிசுகளும் அடுங்குவார்கள். என்னதான் அந்த குடும்பத்தில் இருந்து வந்து இருந்தாலும் தனது முழு திறமையினால் மட்டுமே இந்த இடத்தை அடைந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். இபப்டி இவர்களில் ஒருவர் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடிகரகா இருந்த இவர் பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்தில், விகடன், உன்னை சரணடைந்தேன், ஜி, சிவகாசி போன்ற ஒரு  சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு இளம் நடிகர் பட்டாளத்தை வைத்து சென்னை 2008 என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக பார்க்கப்பட்டது.

இபப்டி இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா,, பிரியாணி, மாஸ்,  போன்ற பல திரைப்படங்களை இயக்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இப்படி தற்போது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தினை இயக்கி கொண்டு இருக்கும் இவர் தனது சிறு வயது புகைப்படத்தினை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யதைகொடுதுள்ளர், இது தான் அந்த புகைப்படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here