அசுரனை அடுத்து வெற்றிமாறனின் அடுத்தபடம் இதுதான்..! – ஆச்சர்யத்தில் சினிமா ரசிகர்கள்!

379

இதுவரை சற்றும் சரிவை காணமல் கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றி பட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் எடுத்த பெரும்பாலும் படங்களில் நடித்தவர் நடிகர் தனுஷ். இவர்கள் இருவரும் இணைந்தாலே அந்தப்படம் மாபெரும் வெற்றியடைந்துவிடும் என்ற நிலை தமிழ் திரையுலகில் மாறிவிட்டது. இப்படி இந்த வருடம் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பட்டிதொட்டி எங்கும் சக்கைபோடு போட்டது.

இந்த படத்திற்காக அனைவரும் பல விருதுகளை எதிர்பார்த்து வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அடுத்த படத்தை யாரை வைத்து இயக்கபோகிறார் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் வைரலாக பரவி வந்தது, இன்னிலையில் அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து இயக்கபோவதாகவும் விரைவில் இந்த படத்திற்கான பணிகள் தொடரும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தது.. இப்படி இருக்க கடந்தவாரம் இளையதளபதி நடிகர் விஜய்க்கு இவர் கதை சொன்னதாகவும் அந்த கதை பிடித்து போக இருவரும் கூடிய விரைவில் இந்த படத்தை பற்றிய செய்திகளை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது .

இந்த அணைத்து செய்திகளையும் பொய் என நிரூபிக்கும் வகையில் தற்போது அதிகாரபூர்வமான செய்தி ஓன்று ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து சூரியை தான் இயக்கவுள்ளாராம், இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே கமிட் செய்யப்பட்ட படம் என்பதால் தயாரிப்பாளர் கேட்டுகொண்டதற்கு இணங்க தற்போது இந்த படத்தை இயக்குகிறாராம். இன்னும் பல வதந்திகள் வந்தாலும் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்துதான் இயக்குவது உறுதி.

இந்த செய்தியை அறிந்த சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழத்தாலும் கூடிய விரைவில் இயக்குனர் வெற்றிமாறன் விஜய் அல்லது சூர்யாவுடன் இணைவது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here