தற்போதையே சூழ்நிலையில் உலகை ஆட்டி படைக்கும் ஒரு விஷயம் என்ன வென்றால் அது இந்த கொடிய நோயான கொரோன தான்.பல நாடுகளில் உயிர் பலி ஏற்படுத்திய இந்த நோயிற்கு இன்னும் மருந்து கண்டு புடிக்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர்.அதே போல் நாளுக்கு நாள் அதிகம் ஆகும் இந்நிலையில் மக்களை பாதுகாக்க இந்திய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மேலும் இந்த நோயினால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிப்பிற்கு உள்ளானது.

சமனிய மக்கள் பணம் இல்லாமல் பெரும் அவஸ்தையை மேற்கொண்டு வருகிறார்கள்.மேலும் பல முன்னணி பிரபலங்கள் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு பல விசயங்களை செய்து வருகிறார்கள்.தற்போது பிரபல நடிகர் ஒருவர் பட வாய்ப்பு இல்லாமல் மற்றும் தனது குடும்ப செலவை சமாளிக்க நாடு ரோட்டில் பழங்களை விற்று வருகிறார்.அவர் வெறும் யாரும் இல்லை நடிகர் சோலங்கி திவாகர் இவர் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்துள்ள ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் நடித்து இருப்பார்.

தற்போது தனது அன்றாட தேவைக்காக இந்த நிலைக்கு தள்ளப்பட்ட இவர்.இந்த சமயத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்.அவர் பழம் விற்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.மேலும் அந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.இன்னும் திரைப்பட துறை இயங்க அனுமதிக்காத நிலையில் அதில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு பெரும் கஷ்டம் தான்.இதனால் பெரும் பதிப்பை சந்தித்து வருகிறது இந்த தொழிலாளர் சங்கம்.