தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகர் நடிகைகளை விட இன்றும் மலையாள திரையுலகில் இருந்து வந்த பல நடிகர்களும் நடிகைகளும் தான் எளிதில் தமிழ் ரசிகர்கள் மனதில் எளிதில் இடம் பிடிக்கின்றனர். இப்படி இன்று லேடி சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமாவே கொண்டாடும் நயன்தாரா கூட மலையாள திரையுலகில் இருந்து வந்தவர் தான். மலையாலத்தில் குணசித்திர வேடங்களில் நடித்த பல நடிகர்கள் த௬ஹமிலிலும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கியவர்கள்.

இப்படி கடந்த ஒரு வருடமாகவே பல சினிமா பிரபலங்களும், நட்சத்திரங்களும் நடிகர் நடிகைகளும் என பலரும் கொரோனா பபாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தனர். கிட்டத்தட்ட இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் கொரோன பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் பலரோ கோரோனாவினால் மறந்தும் உள்ளனர். இப்படி தமிழ் சினிமாவில் கூட கடந்த பல மாதங்களாக ரசிகர்களாலும் மக்களாலும் அதிகம் பேசப்பட்டது எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மறைந்த செய்தி தான் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கேரளாவில் உள்ள கண்ணூரை பூர்விகமாக் கொண்டு மலையாள சினமாவில் அறிமுகமானவர் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. கிட்டத்தட்ட மலையாளத்தில் பல படங்களிலில் முன்னணி குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தேசாதனம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்திரைக்கு அறிமுகமான இவர் இது வரை கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தமிழில் கூட உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பம்மல் கே சமந்தம் திரைப்படத்தில் அவருக்கு தாத்தாவாக நடித்திருப்பார். இப்படி 98 வரை விதியினையே வென்று வாழ்ந்து வந்த இவர் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தும் கூட காலமானார். இப்படி இவரது மறைவிற்கு பாலாரும் இரங்கல் தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here