தற்சமயம் மக்கள் அனைவரும் கொரோனா எனும் பெரும்தொற்றால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்ததோடு பலர் தொடர்ந்து மரணித்து வருகின்றனர். இந்த நிலை மாறி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என தெரியாமல் மக்கள் பெரும் துயரத்தில் செய்வதறியாமல் உள்ளார்கள். இப்படி இருக்கையில் திரையுலகில் போதாத காலமாக பல சினிமா பிரபலங்கள் உடல் நலக்குறைவு மற்றும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து காலமாகி வருகின்றனர். இதன் காரணமாக திரையுலகில் உள்ளவர்கள் பெரும் துயரத்தில் ஒட்டு மொத்த திரையுலகம் அடுத்து யார் என்பது போலன பீதியில் தினம் தினம் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில் பல முன்னணி நடிகர்கள் திரை பிரபலங்கள் காலமான நிலையில் தற்போது இவர்கள் வரிசையில் இன்னுமொரு பிரபல இயக்குனரும் முன்னாள் முதல்வரும் மாபெரும் முத்தமிழ் அறிஞருமான டாக்டர் கலைஞர் அவர்களின் முரசொலியின் எழுத்தாளருமான சொர்ணம் அவர்கள் உடல்நலகுறைவால் காலமாகி உள்ளார்.

இந்நிலையில் இவரது மறைவு ஒட்டுமொத்த கலை உலகத்தையும் திரையுலகினரையும் மீளாத்துயரத்தில் கொண்டு சேர்த்துள்ளது. இவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து 17-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களுக்கு உரையாடல் வசனங்களை எழுதி உள்ளார். மேலும் இவர் தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அவர்களை வைத்து ஒரே ரத்தம் எனும் திரைப்படத்தையும் இயக்கிய பெருமைக்குரியவர். மேலும் இவர் பல அரசியல் பத்திரிகைகள் மற்றும் பல கல்லூரிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

இவ்வாறு திரைத்துறை,அரசியல் ,பத்திரிக்கை என பல்வேறு துறைகளில் சிறந்து வியங்கிய இவரது மறைவிற்கு பல பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் எம்.பியுமான உதயநிதி ஸ்டாலின் போன்ற பல அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here