விஜய் டிவியின் நட்சத்திர நாயகி டிடி(திவ்ய தர்ஷினி).அவர்கள் கலந்த கொண்டு தொகுப்பாளராக பணியாற்றிய அணைத்து ஷோவும் வெற்றி தான்.தனகென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்க கூடியவர்.பல நடிகர்கள் தங்களுகென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும் ஒரு சின்ன திரை தொகுப்பாளனிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் அளவில்லாதது.
டிடி அவர்கள் இதற்கு முன்பும் இப்போதும் வெளியாகின்ற அணைத்து ஷோவிலும் இவர் தான் முக்கிய அங்கம் வகிப்பார்.தனது கிண்டல் கலந்த பேச்சால் மக்கள் மனதில் மட்டுமல்லாமல் குழந்தைகள் மத்தியிலும் இடம் பிடித்தவர்.விஜய் தொலைகாட்சி நடத்திய கொப்பி வித் டிடி என்ற ஷோ மூலம் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தார்.இவர் அந்த ஷோவில் வரும் நடிகர் மற்றும் நடிகைகளை கேள்வி கேட்டு பின்பு கலாய்த்து அவரகளிடம் ஜாலியாக பேசி வருவர்..அந்த ஷோவிற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருக்கும் போகும் இடம் எல்லாம் தனது புகைப்படத்தை பதிவிட்டு வருவது வழக்கம் அதேபோல் தனது ரசிகர்களிடம் ஜாலியாக பேசி வருபவர்.இவர் தற்போது தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தினர்.அதில் சினிமா ரசிகர்கள் கேள்விகளை கேட்டு தள்ளிவிட்டார்கள் .அதில் ஒரு சில ரசிகர்கள் சர்ச்சையாக கேள்வி கேட்டவர்களை வாயடைத்து போகும் படி பதிலை அளித்துள்ளார்.
ஒரு ரசிகர் நீங்கள் “தம் அடிப்பீர்கள” என்று கேட்ட கேள்விக்கு தக்க பதிலை கொடுத்த அவர். என்னுடன் இருக்கும் எல்லாரும் அடிப்பார்கள் அனால் நான் அடிக்க மாட்டேன் அதே போல் யாரையும் அடிக்க விடமாட்டேன் “நான் என் தந்தையிடம் சத்தியம் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.மற்றொரு ரசிகர் “நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா” என்ற கேள்விக்கு உங்களது அன்புக்கு ரொம்ப நன்றி.உங்கள் வாழ்கையில் அன்பு மலர் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
நீங்கள் எப்போது அம்மா ஆகா போகிறீர்கள் என்ற கேள்விக்கு டிடி தக்க பதிலடி கொடுத்த டிடி என்ன சொன்னார் பாருங்களே குழந்தையை பெற்றால் மட்டும் அம்மா கிடையாது” அன்னை தெரசா அவர்கள் எத்தனை பேருக்கு அம்மா என்று எல்லாருக்கும் தெரியும்”என்று வாயடைத்து போகும் படி பேசியுள்ளார்.இதை கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.