தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பல நடிகைகள் தற்போது திரைபாடங்களில் நடிப்பதை தொடர்ந்து சின்னத்திரையில் பல தொடர்களில் நடிப்பதோடு பல தொடர்களை தயாரித்தும் வருகின்றனர்.அந்த வகையில் சொல்லபோனால் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த  குஷ்பு, ராதிகா, ஸ்ரீப்ரியா, நளினி என பல நடிகைகள் தற்போது சின்னத்திரையில் பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் பிரபல முன்னணி நடிகை லலிதா குமாரி. இவர் தமிழ் திரையுலகில் பல படங்களில் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது சின்னத்திரையில் தொடர்களில் குணசித்திர வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி பல தொடர்களை தயாரித்து வருகிறார். மேலும் இவர் தமிழில் மனதில் உறுதி வேண்டும் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததோடு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். புது புது அர்த்தங்கள்,புலன் விசாரணை போன்ற பல படங்களில் நடித்தது மட்டுமின்றி இதுவரை 35-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 1994-ம் ஆண்டு பிரபல நடிகரான பிரகாஷ்ராஜை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர்களுக்கு பூஜா எனும் மகளும், சித்து எனும் மகனும் உள்ளார்கள். இப்படி இருக்கையில் இவர்களது மகனான சித்து கடந்த 2004-ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக உடல்நலகுறைவு காரணமாக காலமானார். இவ்வாறு இருக்கையில் இவரது மறைவு காரணமாக லலிதாவுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உருவாகி அதன் விளைவாக கடந்த 2009-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து திரைத்துறையில் நடிப்பதை தவிர்த்து தன் முழுகவனத்தையும் குடும்பத்தை கவனிப்பதில் செலுத்தி வந்தார். பல வருடங்களாக சினிமா மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த லலிதாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணைய பக்கத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. மேலும் இவரை பிரிந்து பிரகாஷ்ராஜ் அவர்கள் வேறு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் லலிதா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.