கொரோனா வைரஸ் சீனா மக்களிடம் இருந்து பரவ ஆரமித்து தற்போது உலக நாடுகள் அனைத்திலும் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி வருகிறது.தற்போது இந்த நோயானது எளிதில் பரவ கூடும் என்ற நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.தற்போது கொரோனா வைரஸ் என்னும் தொற்றுநோயை குறித்து அணைத்து மக்கள் மற்றும் அரசாங்கம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நோய் காரணமாக மக்களை தங்களது வீட்டில் இருக்கும் படி அறிவுறுத்தி வந்த அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கட்டுப்பாட்டை அகற்றி வருகிறது.மேலும் இதில் சில முக்கிய தொழில்களை மட்டும் நடக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பல மக்கள் தங்களது வேலைகளுக்கு செல்ல முடியாமல் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள்.இந்நிலையில் சினிமா துறை இயங்க இன்னும் அரசாங்கம் உத்தரவு பிரபிக்காத நிலையில் அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளன்ர்கள்.

தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் நடிகராக வளம் வருபவர் ராஜேஷ் கரீர்.இவர் ஹிந்தியில் பல தொடர்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகர் ராஜேஷ் கரீர் அவர்கள் மங்கள் பாண்டே, அக்னிபத் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவரது சமுக வலைத்தளமான பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் “நான் கேக்க அசிங்கபட்டால் என் வாழ்க்கையை வாழ கஷ்டமாகிவிடும்”.என் நிலைமை இந்த கொரோன காரணமாக பெரும் சங்கடத்தில் இருந்து வருகிறது.மேலும் அவர் எனக்கு யாரவது உதவி செய்யுங்கள் நான் சாப்பாட்டிற்கு ரொம்ப கஷ்ட படுகிறேன் .எனக்கு யாரவது 200,300ரூபாயாவது அனுப்புங்கள்.இனிமேல் வாழ்க்கை எப்படி இருக்கும் என தெரியவில்லை மேலும் படங்கள் ஷூட்டிங் எப்பொழுது ஆரம்பிக்கும் என தெரியவில்லை.ரொம்ப கடினமாக உள்ளது என அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.வீடியோ கீழே உள்ளது.