தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை சின்னத்திரையில் இருந்து பல நடிகர்கள் வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர். இருப்பினும் இவர்கள் சின்னதிரையில் நடிக்கும் போது கிடைக்கும் வரவேற்ப்பு பெரிய திரைகளில் கிடைப்பது இல்லை.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் யூதன் பாலாஜி. இந்த தொடரில் நடித்த அனைவரும் தற்போது படங்கள் மற்றும் சின்னதிரையில் உள்ளனர்.  இந்நிலையில் இந்த தொடரில் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பாலாஜி இந்த தொடரை தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.

2009-ம் ஆண்டு வெளியான பட்டாளம் படத்தில் முக்கியக கதாபாத்திரமாக நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் தனக்கென தனி ஒரு இடத்தை  பிடித்தார். இத்தனை தொடர்ந்து காதல் சொல்ல வந்தேன் எனுமேனும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.நகர்வலம், மெய்யழகி போன்ற படங்களில் நடித்துள்ளார் பாலாஜி. இந்நிலையில் 2016-ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த பாலாஜி 2018-ம் ஆண்டு காதலர் தினத்தன்று இருவரும் சம்மதத்துடன் விவாகரத்து வங்கி பிரிந்தனர்.

இதற்க்கு காரணம் கேட்டால் அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளே என கூறுவதோடு காதலர் தினத்தில் அனைவரும் ஒன்று சேரும் நாளில் இவர்கள்  பிரிந்ததொடு இது கூறித்து கேட்டபோது, இதுவே எனக்கு மகிழ்ச்சியை தருகிறது ஹாப்பி வேலன்டைன்ஸ் டே டூ எவெரி ஓன் என கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் பாலாஜியும் அவரது மனைவியும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் நம்ம ஜோவின் மனைவியா என ஆச்சரியமடைந்து  வருகின்றனர். மேலும் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் பாலாஜி தற்போது தாடி மீசை என பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here