சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த ராகவா லாரன்ஸ் – கமலை சந்தித்து என்ன கூறினார் தெரியுமா?

747

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து பின் படிப்படியாக மக்கள் மனதில் இடம்பிடித்து தற்போது நடிகர், இயக்குனர், தயாரிபாளரென அசத்தி வருபவர் ராகவா லாரன்ஸ். இந்த வருடம் இவர் இயக்கி நடித்து வெளிவந்த காஞ்சனா 3 விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசபடவில்லையேன்றாலும் கூட வசூலை அள்ளி குவித்தது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தர்பார் இசை வெளியீட்டு விழாவில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சிலரை பற்றி பேசினார்.

சிறுவயதில் தான் ரஜினி வெறியனாக இருந்த போது கமல் பட போஸ்டர்களை சாணி அடித்து கிழிப்பேன் என இவர் கூறியது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. மேலும் அரசியல் பிரமுகர்களை பற்றி பேசிய இவருக்கு விசிலடித்து ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தாலும் இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதன்பின்பு, நான் பேசியதை பற்றி பலரும் தவறாக புரிந்துகொண்டதாக சமூகவளைதலங்களிலும் பதிவிட்டார், அதுமட்டுமில்லாமல் ரஜினி பிறந்தநாளன்று ரஜினி மக்கள் மன்றம் மேடையில் மன்னிப்பும் கேட்டார். தற்போது மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமலகாஸனை சந்தித்த இவர், தான் மேடையில் பேசியதை பற்றி விளக்கமளித்துள்ளார்.

புகைப்படம் இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here