தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சேதுராமன் அவர்களும் ஒருவரே.இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும் அந்த படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.இவர் தமிழ் சினிமா ரசிகைகளின் மனதில் வாழ்ந்து வருபவர்.இவர் சினிமா துறை மட்டுமல்லாமல் இவர் ஒரு டாக்டர் ஆகா இருந்து வருகிறார்.இவர் தோல் சமந்தப்பட்ட துறையில் டாக்டர் ஆகா இருந்து வந்தவர்.

தற்போது இவர் நேற்று மாலை 8.45மணியளவில் மாரடைப்பால் காலமானார்.அதை அறிந்த சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.நடிகர் சேது அவர்கள் பிரபல தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சந்தானம் அவர்களின் நெருங்கிய நண்பரான இவர் அவர் மூலமாக தான் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழ் சினிமாவில் நடித்து முதல் முதலாக வெளியான படமான கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் கோலிவுட் சினிமா திரையில் அறிமுகமானவர்.பின்பு சந்தனத்துடன் இணைந்து இவர் சில படங்களில் நடித்துள்ளார்.இவர் பின்பு வாலிப ராஜா என்னும் படத்தில் இவர் சந்தானம், விகஷா சிங்க், பவர்ஸ்டார் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது டாக்டர் சேதுராமன் அவர்களுக்கு 35 வயதே ஆகியுள்ள நிலையில் தற்போது இளம் வயதில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.இதை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தற்போது இந்த செய்தியானது இணையதளத்தில் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
This is really shocking 😢can’t believe that he is no more 😢 he was absolutely healthy and he has good and helping heart inside naturally 😢 his girl baby is almost one year only old 😢 it’s really painful 😢My painful condolences to his wife and family 😢#RIPsethu #Rip 😢🙏 pic.twitter.com/VCrv8CPZzd
— Athulya Ravi (@AthulyaOfficial) March 26, 2020
Devastating to hear this ….Very unfortunate and untimely . Such a warm and decent person who only had good things to say . He was was too young to leave the world .May god give the support his wife,child and family need . #RIPSethu pic.twitter.com/aoNQer1sNo
— Ramya Subramanian (@actorramya) March 26, 2020