தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை காதலை மையமாக வைத்து தான் பெரும்பாலான படங்கள் வந்த வண்ணம் உள்ளது. அதிலும் சொல்லப்போனால் காதல் கதை இல்லாமல் எந்த ஒரு படமும் வெளிவருவது இல்லை மேலும் இந்த மாதிரியான படங்கள் தான் பெருமளவில் மக்கள் மத்தியில் விரும்பி பார்க்கபடுவதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்துள்ளது. இதன் காரணமாக பல முன்னணி இயக்குனர்களும் தொடர்ந்து காதல் படங்களை இயக்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல பிரமாண்டமான படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரபல முன்னணி இயக்குனர் சங்கர் அவர்கள்.

அந்த வகையில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் இப்படி இருக்கையில் சங்கர் அவர்களின் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காதல். இந்த படம் மக்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் பெரிதளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம் மேலும் இந்த படம் அந்த ஆண்டின் சிறந்த காதல் படமாக இருந்ததோடு இன்றளவும் இந்த மாதிரியான இல்லாத அளவுக்கு ஒரு புகழை அடைந்துள்ளது. மேலும் அந்த சமயத்தில் இளம் நடிகராக நடித்து வந்து கொண்டிருந்த பரத் அவர்களுக்கு இந்த படம் மக்கள் மற்றும்

சினிமா வட்டாரத்தில் பலத்த பிரபலத்தை கொடுத்தது மட்டுமின்றி இவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இவ்வாறு இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்த இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது பரத் இல்லையாம் பாய்ஸ் படத்தில் ஐந்து நடிகர்களில் ஒருவராக நடித்த மணிகண்டன் அவர்கள் தானாம். இவர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஐந்து நண்பர்களில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து பல படங்களில் இவர் துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் பாய்ஸ் படத்தில் இவருடன் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் தற்போது சினிமாவில் பிரபலமாகி பல படங்களில் முன்னணி நடிகர்களாக நடித்து வருகிறார்கள். இருப்பினும் இவருக்கு ஒரு சில படங்களுக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் பரிதவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மணிகண்டன் காதல் படம் மட்டுமின்றி பல படங்களில் நான் நடிக்க வேண்டியிருந்தது என்பது போலானா பல தகவல்களை கூறியுள்ளார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here