தற்போது உள்ள நிலையில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகி வருகிறது. மேலும் சொல்லபோனால் வெள்ளித்திரையில் இருக்கும் பல முன்னணி நடிகர் நடிகைகள் கூட சின்னத்திரை பக்கம் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள் எனலாம். அந்த வகையில் சின்னத்திரையில் வரும் நிகழ்ச்சிகளும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் எளிதில் இடம் பிடித்து விடுவதோடு பிரபலமாகி விடுகின்றனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சி மற்றும் தொடர்களுமே மக்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படி இருக்கையில் இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் தொடர்கள் அனைத்தும் சினிமா பாணியில் எடுக்கபடுவதோடு அதன் தலைப்புகளையே மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சேனலில் சினிமா பட தலைப்பை வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் காற்றின் மொழி. இந்த தொடரில் கதாநாயகனாக ராஜா ராணி தொடர் புகழ் நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஜோடியாக கண்மணி எனும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக பிரியங்கா ஜெயின் எனும் நடிகை நடித்து வந்தார். இந்த தொடர் இவரை மையமாக வைத்தே நகர்கிறது.

கன்னட நடிகையான இவர் இந்த தொடரில் நடிப்பதற்கு முன்னரே கன்னட மொழி படங்களில் கதாநாயகியாகவும் மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த தொடர் முழுவதும் கிராமத்து பொண்ணு கேரக்டரில் தொடர் முழுவதும் தாவணி பாவாடையில் வலம் வந்த அம்மிணி உண்மையில் அதற்கு நேர்மாறாக செம மாடர்னாம். இந்நிலையில் இவர் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் அதில் இவர் ஒரு ஆண் நண்பருடன் இருக்கும்படியான பல மாடர்ன் வீடியோக்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியக்க செய்து வருகிறார்.

இப்படி இருக்கையில் அவர்தான் அம்மியின் காதலராக இருக்குமோ என பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் சமீபத்தில் அந்த நபருடன் நீச்சல் குளத்தில் அவருடன் நெருக்கமாக கட்டி அணைத்து முத்தம் கொடுப்பது போன்ற பல செயல்களை செய்து அந்த வீடியோவை தனது யூடுப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த பலரும் தொடரில் ஒன்னும் தெரியாத பாப்பாவா இருந்த கண்மணியா இப்படி என கலாயித்து வருகின்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here