இந்த உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருவது இந்த கொடிய நோயான கொரோன தான்.மேலும் இதனால் பல மக்கள் அவர்களது வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.அன்றாட வாழ்கை பெரிதும் முற்று புள்ளியாக மாற்றியது இந்த கொரோன நோய்.மேலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் இந்த தருவாயில் மக்கள் அந்த நோயில் இருந்த தங்களை பாத்துக்கொண்டு வீட்டில் இருக்கும் படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வந்தனர்.மேலும் கிட்டத்தட்ட நான்கு மாதமாக பலரும் வீட்டில் இருந்த படி எந்த ஒரு வேலைகளும் செய்யாமல் இருந்து வந்தனர்.மேலும் அரசாங்கம் பல தளர்வுகளை அண்மையில் மக்களுகாக செய்து கொடுத்தது.

இந்த லாக்டவுன் காரணமாக எந்த ஒரு தொழில் நிறுவனங்களும் இயங்காமல் அரசாங்க உத்தரவின் படி மூடி இருந்தது.மேலும் இதில் சினிமா துறையும் இயங்காமல் இருந்து வந்தது.சில விதிமுறைகளின் படி சில நிறுவனங்கள் இயங்கலாம் என உத்தரவு விட்ட நிலையில் தற்போது சில பெயர்களை வைத்து தொழில்துறைகள் இயங்கி வருகிறது.

மேலும் இந்த லாக்டவுனில் பலரும் ஒரு வேலை சாப்படிற்கே பெரிதும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் எதோ ஒரு தொழில் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து பலரும் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.அந்த வகையில் சினிமா துறையில் பல பிரிவின் கீழ் வேலை செய்யும் மக்களுக்கு சினிமா துறை இயங்க முடியாமல் போனதால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகினார்.

இதில் பல நடிகர் மற்றும் நடிகைகள் பல புது தொழில்களை செய்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.இந்நிலையில் பிரபல மலையாள நடிகரான வினோத் கூவூர் அவர்கள் அந்த மொழி சினிமா துறையில் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்.மேலும் வினோத் கூவூர் அவர்கள் தற்போது மீன் விற்கும் தொழில் இறங்கியுள்ளார்.சினிமா துறைகள் இயங்காத நிலையில் இம்முடிவை எடுத்துள்ளார்.அவரது நபர்களுடன் சேர்ந்து மீன் பண்ணை ஒன்றை ஆரமிக்க உள்ளாராம்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here