தற்போது திரைப்படங்களில் நடிப்பவர்களை காட்டிலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் உள்ளவர்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள்.  காரணம் அனைவரும் இணையத்தில் தான் தங்களது முழ நேரத்தையும் செலவிடுகின்றனர். எந்த ஒரு நிகழ்வானாலும் அடுத்த நொடியே இனையத்தில் வெளியாகி அது வைராலாக்கபடுகிறது. தற்போது பலர் சோசியல் மீடியாவை நல்ல வழியில் பயன்படுத்தினாலும் அதை தவறாக பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்போது திரையரங்குகள் சரிவர இயங்காத நிலையில் திரைப்படங்கள் அணைத்தும் இணையத்திலேயே ஒளிபரப்பாகும் நிலை வந்து விட்டது. இப்படி இருக்கையில் கடந்த வருடம் இணையத்தில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோ என்றால் அது ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோவாகத்தான் இருக்கும்.

இந்த பாடல் ஒரு படத்தின் பாடலாகும்.இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் அந்த படத்தை பிரபலபடுத்த இந்த பாடலுக்கு யார் நன்றாக நடனம் ஆடி சிறப்பாக வீடியோ போடுகிறார்களோ அவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு என்று தனது இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த பாடலுக்கு பலர் நடனமாடி அதை வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தான் கேரளா மாநிலத்தை சேர்ந்த இந்தியன் ஸ்கூல் ஆப் காமெர்ஸ் எனும் கல்லூரியின் பெண்கள் நடனமாடி வெளியிட்டிருந்த வீடியோ இணையத்தில் வேற லெவல் ரீச்சை அடைந்தது. சொல்லபோனால் படத்தில் கூட இந்த பாடல் அந்த அளவுக்கு பேமஸ் ஆகவில்லை அந்த அளவிற்கு இருந்தது இவர்களது நடனம்.

மேலும் இதில் முன் வரிசையில் ஆடிய ஷெரின் எனும் ஆசிரியரின் நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இந்த பாடல் மோகன்லால் நடிப்பில் வெளியான வெளிபடிண்டே  புஸ்தகம் எனும் திரைபடத்தில் வெளியானது.  இந்நிலையில் அந்த பாடலுக்கு சிறப்பாக நடனமாடிய ஷெரினுக்கு தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இருந்தாலும் திரைப்படங்களில் நடிக்க விரும்பாத அவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் தமிழில்  சூர்யா  நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைபடத்தில் சொடக்கு மேல சொடக்கு எனும் பாடலில் நடனமாடியுள்ளார்.

இதை தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருக்கும் ஷெரின் சில பாடல் ஆல்பம்களில் மட்டும் நடித்து வருகிறார். மேலும் இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு கேரளாவின் தொடுப்புழா அருகில் வாழக்குளம் எனும் ஊரில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதே மாநிலத்தை சேர்ந்த பிரபு டாலமி என்பவரை தான் ஷெரின் திருமணம் செய்து கொள்ளபோகிறார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்ட புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. இதை தொடர்ந்து இவர்களது திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார் ஷெரின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here