தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து அந்த படங்களும் வெற்றி அடைந்திருந்தாலும் சில நடிகைகள் அதற்குமேல் படங்களில் நடிக்காமல் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு  விலகி விடுகிறார்கள். அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். இவர் ஆரம்ப காலகட்டங்களில் மாடலிங் துறையில் கலந்து கொண்டு, மிஸ் இந்தியா என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து சில விளம்பரங்களில் நடித்த இவர் பின்பு டோலிவுட்டில் வெளியான லீடர் திரைபடத்தின் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்த ரிச்சா கங்கோபாத்யாய் தமிழில் மயக்கம் என்ன படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக அறிமுகமானார் இந்த படத்தில் அவரின் சிறந்த நடிப்பை பாராட்டி இவருக்கு சைமா, விஜய் டிவி விருதுகளை பெற்றார். அதே ஆண்டு சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவை கலக்கினர் .

இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அப்படி நடித்த அவர் அடுத்து என்ன படம் நடிக்க போகிறார் என அவரின் ரசிகககள் எதிர்பார்த்த நிலையில் தான் கல்லூரி படித்த பொது காதலித்த ஜோ லங்கோவை  திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார் ரிச்சா கங்கோபாத்யாய.

தற்போது அவர் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ரிச்சா கங்கோபாத்யாய் தன்னுடைய சமுகவளைதல பக்கத்தில் தன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியுட்டுள்ளார் அதில் அடாத மாதம் குழந்தை பிறந்து விடும் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகை படத்தை பார்த்த பலரும் ரிச்சா மிகவும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டதாக கருத்துகளையும் மற்றும் அவரின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here