பொதுவாகவே சினிமாவில் சில உண்மை கதைகள் மற்றும் பிரபல தலைவர்களின் வாழ்க்கையை மையபடுத்தும் வகையில் அவர்களின் பயோபிக் படங்கள் வெளியாகி வருவது வழக்கம். அந்த வகையில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய பல வீரர்களின் வாழ்க்கையை மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் பல பயோபிக் படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கூட மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படம் கூட வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து நடிகை சாவித்திரி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் தோனியின் பயோபிக் படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அந்த படங்கள் வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இவர்களின் வரிசையில் தன்னுடைய வாழ்க்கையையும் பயோபிக் படமாக எடுக்க முடிவு செய்துள்ளார் பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும் இலங்கை அணியில் இடம்பெற்று அந்த அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார் மேலும் இதுவரைக்கும் 800-க்கும் மேற்பட்ட விக்கட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதன் காரணமாக தனது வாழ்க்கையை படமாக எண்ணிய முத்தையா முரளிதரன் படத்தில் தனது கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னணி நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தேர்வு செய்து இருந்தனர். இந்நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியான நிலையில் இலங்கையில் ராஜபக்சேவால் நடந்த பல இன்னல்களுக்கு முத்தையா முரளிதரனும் உடந்தையாக இருந்த காரணத்தினால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என அவரது ரசிகர்கள் கொடுத்த கண்டனங்கள் காரணமாக அந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி விட்டார். இதன் காரணமாக தனது பயோபிக் படத்தில் விஜய் சேதுபதியை தவிர்த்து வேறு எந்த நடிகரும் சரியாக வரமாட்டார்கள் என கருதிய முத்தையா முரளிதரன் இந்த படத்தை கைவிடுவதாக இருந்தார்.

ஆனால் தற்போது அந்த படம் மீண்டும் உருவாகி வருகிறது மேலும் அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் ஷ்லம்டக் மில்லியனர் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் தேவ் பட்டேல் அந்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள்  விஜய் சேதுபதி இவர் அந்த கேரக்டருக்கு செட்டாக மாட்டார் என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here