திரையுலகில் இன்றைக்கு எந்தனையோ புதுவித கதையம்சங்களை கொண்ட பல படங்கள் வெளிவந்த போதிலும் அந்த காலத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பல படங்களுக்கு இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. மேலும் அதையும் தாண்டி அந்த காலத்தில் படங்கள் பெரும்பாலும் ஒரு சில காட்சிகள் மக்கள் ஆழ பதியும் வகையில் பிரபலமடைந்து இருக்கும் அதேபோல் அந்த காட்சிகளில் வரும் நடிகர் நடிகைகளையும் யாரும் அவ்வளவாக மறந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரிதளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நாட்டாமை. இந்த படம் இன்றும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துவைத்துதான் இருக்கிறது எனலாம்.

மேலும் அதையும் தாண்டி இந்த படத்தில் வரும் ஒரு முக்கிய காட்சியான அந்த டீச்சர் காட்சியையும் அவருக்கு கொடுக்கப்படும் பின்னணி இசையையும் ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்நிலையில் அந்த காட்சியில் டீச்சராக நடித்து பிரபலமானவர் தான் ராணி. ஆந்திராவை பிறப்பிடமாக கொண்ட இவர் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரின் மகளாவர். மேலும் இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர் என இவரது குடும்பம் சற்று பெரியதாம். மேலும் ராணி அவர்கள் படத்தில் டீச்சராக நடித்து இருந்தாலும் நிஜத்தில் அவ்வளவாக படிக்கவில்லை எட்டாவது வரை தான் படித்துள்ளார். இப்படி இருக்கையில் சிறு வயது முதலே நடனம் ஆடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் வளர்ந்த பின் திரையுலகில் பிரபல நடன இயக்குனரான பாபு அவர்களின் குருப்பில் குருப் டான்சராக அறிமுகமானார்.

இந்நிலையில் ஒரு படத்தில் பாடல் ஒன்றுக்கு குருப் டான்சர்களில் ஒருவராக ஆடி வந்த இவரை பார்த்த பிரபல இயக்குனர் கங்கை அமரன் அவரது படமான வில்லு பாட்டுக்காரன் படத்தில் அவரை கதாநாயகியாக அறிமுகபடுத்தினார். மேலும் அந்த படம் நூறு நாட்களை தாண்டி ஓடிய நிலையில் திரையுலகில்  பலத்த வரவேற்பை பெற்றார். இதன் மூலம் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் தெலுங்கில் சீயான் விக்ரம் அவர்களுடன் ஜோடியாகவும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் தான் இவருக்கு நாட்டாமை படத்தில் அந்த டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதலில் இதில் நடிக்க மறுத்து விட்டாராம் அதன் பின் படகுழுவினரின் கட்டாயத்தின் பின்னர் தான் இதில் நடித்தாராம். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைராளாகி வருகிறது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here