திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு படங்களில் முக்கியத்துவமும் பிரபலமும் கிடைக்கிறதோ அதே அளவிற்கு அந்த படங்களில் ஹீரோவின் சிறுவயது கதாபாத்திரங்களின் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கும் மக்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பு கிடைக்கபெறுகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பதோடு தொடர்ந்து பல கருத்து உள்ள படங்களில் ஹீரோவாக சிறப்பாக நடித்து பல லட்சம் இளைஞர்களை தனது ரசிகர்களாக வைத்து இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சூர்யா அவர்கள்.

இவர் இந்த அளவிற்கு திரையுலகில் பிரபலமாக இருப்பதற்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் பாலா இயக்கத்தில் பிரபல நடிகர் ராஜ்கிரண் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நந்தா. இப்படி இருக்கையில் இந்த படத்தில் சூர்யாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த வரவேற்பை பெற்ற நடிகர் வினோத் கிஷன். இந்த படத்தில் இவரது நடிப்பை தொடர்ந்து கிரீடம், சமஸ்தானம் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படங்களை தொடர்ந்து வளர்ந்து பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த நான் மகான் அல்ல படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். அந்த படத்தில் இவரது சிறந்த வில்லத்தனத்தை பாராட்டி அறிமுக சிறந்த வில்லன் விருதை வென்றார். மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இமைக்கா நொடிகள், ஜீவா போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு தனி அடையாளம் தரும் வகையில் எந்த கதாபாத்திரமும் அமையாத நிலையில் ஆர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அந்தகாரம் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த வினோத் தற்போது ஹீரோ வாய்ப்புக்காக போராடி வருவதோடு அதற்காக தனது உடல் எடையை அதிகரித்து கட்டுமஸ்தாக மரிபோயுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நந்தா படத்தில் சிறுவனாக வந்த வினோத்தா இது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனதோடு வேற லெவலில் ஹீரோ போல் மாறியுள்ளதை பார்த்து வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here