தமிழ் சினிமவில் நடிகைகளுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் மனதில் இருக்க தான் செய்கிறார்கள்.அந்த வகையில் பல புது முக நடிகைகளின் வரத்து தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.மேலும் நடிகைகள் ஒரு சில படத்திற்கு மேல் நடித்து விட்டு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காமல் வந்த வேகம் தெரியாமல் போய் விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் நெடுஞ்சாலை படம் மூலம் அறிமுகமான நாயகி தான் ஷிவதா.இவர் அந்த படத்தில் நடிகர் ஆரியுடன் இணைந்து நடித்து பல ரசிகர்கள் தன் வசம் இர்ர்த்தார்.
மேலும் நெடுஞ்சாலை படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து அந்த படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இவர் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது.ஜீரோ, அதே பொங்கல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள மொழி சினிமா துறைகளில் பல படங்களில் நடித்துள்ளார்.அந்த மொழிசினிமா துறை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அணைத்து படங்களும் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது .
நடிகை ஷிவதா தற்போது தமிழ் சினிமா வில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தற்போது மாறா, வல்லவனுக்கு வல்லவன், காட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் 2014ஆம் ஆண்டு முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு கர்ப்பமானார்.இவர் பிறகு தமிழ் சினிமாவை விட்டு விலகிவிட்டார்.இவருக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த செய்தியை தனது சமுக வலைத்தளத்தில் பதிவிட்ட நடிகை ஷிவதா அவர்களுக்கு பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் அவரது குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.