பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக உள்ளார்கள் இப்படி இருக்கையில் இவர்களை காட்டிலும் இந்த சேனலில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மிக பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளர்கள் எனலாம். அந்த வகையில் கடந்த பதினைந்து வருடங்களாக ஒளிப்பரப்பாகி வரும் ஒரு முதன்மை ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா வாகத்தான் இருக்கும்.

மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை போல் இல்லாமல் மக்களுக்கு அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை குறித்த விழிப்புணர்வும் அது சம்பந்தம்பட்ட நிகழ்வுகளை விளக்கும் வகையில் அரங்கேறும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமாக உள்ளதோடு பெரிதளவில் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு பிரபலமாக காரணம் இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளரான கோபிநாத் அவர்கள் தான். இவர் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பேமஷாக இருக்க காரணம் இவரது சரளமான தமிழ் பேச்சும், தெளிவான சிந்தனையும் கணீர் போன்ற குரலும் தான்.

இந்நிலையில் இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தான் தொகுப்பாளாராக அறிமுகமானார் அதனை தொடர்ந்து பல முன்னணி டிவி சேனல்களில் பணியாற்றிய இவர் இதன் மூலம் பிரபலமடைந்து விஜய் டிவியில்  மக்கள் யார் பக்கம் எனும் விவாத நிகழ்ச்சியில் நடுவராக களம் புகுந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் தன்னை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டார். மேலும் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த கோபிநாத் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாக இருக்கும் இவரை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு இவரது குடும்பம் பற்றி நமக்கு தெரியாது. இந்நிலையில் கோபிநாத் அவர்களுக்கு அண்ணன் ஒருவர் இருக்கிறார் அவர் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாகரன் சந்திரன் தான் இவரது அண்ணன். இவர் இந்த தொடரை தொடர்ந்து பல முன்னணி தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here