கடந்தவருடம் வெளிவருவதற்கு முன்பே மிகச்சிறந்தபடம் என்ற பெயரையும் வசூலையும் அள்ளிக்குவிக்குமென எதிர்பார்கபட்ட படம் ஜோக்கர். இந்தப்படம் வெளிவன்த பிறகு ரசிகர்களின் ஆதரவை பெற்றது மட்டுமல்லாமல் சினிமா விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்வின் ஃபோனிக்ஸ் ஜோக்கராக நடித்திருந்தார். இவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப்படம் இந்த வருடத்திற்க்கான அணைத்து விருதுகளையும் பெறப்போகிறது என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹாலிவுட் திரைத்துறையில் மிக உயரிய விருதான அகடமி ஆஸ்கர் தனது விருதுகளுக்காக பரிந்துரை பட்டியலை வெளியிட்டது.
ஆஸ்கர் சினிமா துறைக்கான விருதுகள் ஒரு ஒரு வருடமும் இருபதுக்கும் மேற்பட்ட துறைகளுக்கு வழங்கபடுகிறது. இந்த வருடம் பல படங்களும் போட்டி போட்டுகொண்டு விருது பரிந்துரைபட்டியலில் வரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் பல படங்கள் பின்வாங்கின. இதில் ஜோக்கர் படம் 11 பிரிவுகளை பரிந்துரைக்கப்பட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதற்க்கு அடுத்தபடியாக குவண்டன் டரன்டினோ எனும் ஜாம்பவான் இயக்கிய ஒன்ஸ் சப்பானிய டைம் இன் ஹாலிவுட் என்ற திரைப்படம் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கும் விருதுகள் குவியுமென எதிர்பார்க்கலாம். மேலும் விமர்சகர்களின் பேராதரவை பெற்ற இரண்டு படங்களான தி ஜரிஷ் மேன் மற்றும் 1917 படங்களும் தனது பங்கிற்கு பல விருது பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த 92ஆவது ஆஸ்கர் திரைப்பட விழா பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஜோக்கர் படம் மட்டும் ஆறிலிருந்து 9 விருதுகளை பெறுமென ஹாலிவுட் வட்டாரங்களில் பேசபடுகிறது.