முதன் முதலில் ஹிந்தி மொழியின் தொடங்கப்பட்டு பிக்பாஸ் என அழைக்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. பல பாலிவூட் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த நிகழச்சி முதல் சீசனில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்த காரணத்தால் தற்போது வட இந்திய மொழிகளில் பதினான்காவது சீசன் வரை சென்றுகொண்டு இருக்கிறது. இப்படி பாலிவூட்டில் யார் பிரபலமடைந்து இருந்தாளுளும் அவர்கள் அந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இப்படி பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சியை,

தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்ப முடிவு செய்த பிக்பாஸ் குழு இங்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது. இபப்டி தமிழிலும் தொடங்கப்பட்ட இந்த நிகழச்சி பற்றி மக்களுக்கு பெரிதாக பிரபலம் இல்லை என்றாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் பார்த்து வந்தார்கள். பின்னர் போக போக மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடித்துப்போகவே வரா வாரம் பார்த்து ரசித்து வந்தார்கள் இப்படி தமிழ் முதல் சீசன் பல சர்சிகளையும் எதிர்ப்புகளையும் மீறி மிகப்பெரிய வெற்றியடைந்தது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கடந்த மூன்று சீசன்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து, நான்காவது சீசன் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் லாக்டவுன் அறிவிக்கபடவே இந்த நிகழ்ச்சி தள்ளிவைக்க பட்டு கடந்த மாதம் முதல் வாரத்தில் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது. இபப்டி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கும் இந்த் நிகழ்ச்சியில் பலரும் புது போட்டியாளர்களாக உள்ளே நுழைந்துகொண்டு இருக்கிறார்கள்.

இபப்டி இந்த முறை பாடகி சுசித்ரா உள்ளே சென்றுள்ளநிலையில் விரைவில் பிரபல சீரியல் நடிகரான ஆசிம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெய்வம் தந்த வீடு பகல் நிலவு போன்ற சீரியல்களில் கலக்கி இருக்கும் ஆசிம் பகல் நிலவு சீரியலில் ஷிவநியுடன் நடித்ததற்காக சிறந்த ரொமாண்டிக் ஜோடி என விருதையும் வென்றனர். பாலாஜி முருகதாஸ் ஏற்கனவே போட்டியாக இருக்க இருக்க இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here