கடந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே நமது வாழ்க்கையில் போதாத காலமாக இருந்து வருகிறது அதேபோல் திரையுலகிலும் பல சினிமா பிரபலங்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிபோயுள்ளது எனலாம். அந்த வகையில் பல முன்னணி சினிமா பிரபலங்களின் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் முன்னணி சீரியல் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் வெகு பிரபலம். மேலும் இந்த தொடரில் வரும் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்திற்காகவே இந்த தொடரை பார்ப்பவர்கள் அதிகம் அதிலும் பல இளைஞர்களும் இந்த தொடரை இவர்களுக்காகவே விருபி பார்த்து வந்தனர்.

இப்படி இருக்கையில் கதிர் கேரக்டரில் குமரனும் முல்லை கேரக்டரில் பிரபல வி.ஜே சித்ராவும் நடித்து இருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரு தனியார் ஹோட்டலில் காலமானார் அப்போது அவருடன் அவரது கணவராக வர இருந்த ஹேம்நாத் உடன் தங்கியிருந்த நிலையில் வர காலமானார்

சித்ராவின் மறைவிற்கு பின்னர் சின்னதிரையினரும் அவரது குடும்பத்தாரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்த வகையில் சித்ரா அவர்களின் எந்த பொருளையும் உபயோகபடுத்தாமல் பாதுகாத்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர் இந்நிலையில் சித்ரா ஆசையாக வாங்கிய விலை உயர்ந்த சொகுசு காரான ஆடி காரையும் யாரும் பயன்படுத்தாமல் அவரது நினைவாக பாதுகாத்து வருகிறார்களாம். மேலும் அவரது மறைவிற்கு முன்னர் அந்த ஹோட்டலுக்கு கூட இந்த காரில் தான் சென்று இருந்தாராம்.

இதை தொடர்ந்து இந்த காரை சித்ராவிற்கு ஒரு அரசியல் பிரபலம்தான் வாங்கி கொடுத்தாராம் என பல வதந்திகள் கசிந்த வண்ணம் இருந்தது இந்நிலையில் அந்த காரை சித்ரா தனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது என அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர். இப்படி இருக்கையில் சித்ராவின் மறைவிற்கு பின்னர் அதை யாரும் பயன்படுத்தாமல் அவ்வபோது சுத்தம் செய்து அவரது நினைவாக பாதுகாத்து வருகிறார்கள்.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here