தற்போது தமிழ் சின்னத்திரை ஒரு புதிய உச்சத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம், புதிய புதிய சீரியல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை தாண்டி மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது. சினிமா நடிகர் நடிகைகளும் தாண்டி தற்போது இந்த சீரியல் நடிகைகளும் நடிகர்களும் மக்களிடையே அதிக புகழ் பெற்று மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. முன்பெல்லாம் பாத்து படங்களில் நடித்தால் கிடைக்காத பெரும் புகழும் கூட தற்போது சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்துவிட்டால் கிடைக்கிறது என்பதுதான் உண்மை..

இப்படி ஒரு ஒரு ஆண்டும் மக்களுக்கு புது புது சீரியல் தொடர்களை அறிமுகம் செய்வது விஜய் தொலைக்காட்சி . இப்படி கடந்த ஆண்டு இந்த டீவி வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் கூட போக போக ஆவலுடன் விரும்பபி பார்க்க ஆரம்பித்ததால் வெற்றிகரமாக தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இபப்டி இந்த சீரியலில் அண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுஜிதா. இவர் இதற்கு முன்பு பல திரைபபடங்களில் நடித்து இருந்தாலும் கூட அங்கு சினிமா வாய்ப்பு குறைந்து போகவே தற்போது சீரியலில் கலக்கி வருகிறார்.

இப்படி பல வருடங்களுக்கு முன்பு தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். கோயமுத்தூரை சேர்ந்த இவரது கணவர் தனுஷ் போட்டோக்ராபராக பனி புரிந்து பின்னர் விளம்பர பட இயக்குனராக கம்பெனி நடத்தி வருகிறார். இப்படிஇவர் இயக்கிய பல விளம்பரங்களில் கூட நடிகை சுஜிதா நடித்துள்ளார்.

இப்படி நடிகை சுஜிதா மற்றும் தனுஷ் தம்பதியருக்கு ஒரு ஆன் குழந்தை பிறக்க அவருக்கு தன்வின் என பெயரிட்டுள்ளனர் .. கேரளாவை பூர்விகமாக கொண்டு இருந்தாலும் இவர் தற்போது சென்னையில் தான் வசித்து வருகிறார். மேலும் இந்த சீரியல் மட்டுமல்லாமல் அதே விஜய் டீவியில் புதிய பல சீரியல்களிலும் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதோ இவரது குடும்ப புகைப் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here