தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து பிரபலமாபவர்களை காட்டிலும் யூடுப் மற்றும் இணையத்தில் வெளியாகும் வீடியோ ஆப்களின் மூலம் பிரபலமாபவர்கள் தான் அதிகம் எனலாம். சொல்லபோனால் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கூட யூடுப் சேனல் ஆரம்பித்து அதில் தங்களது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள் அந்த அளவிற்கு இந்த யூடுப் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளிவந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் நிராகரிக்கபட்டு அந்த விரக்தியில் யூடுப் சேனல் ஒன்றை துவங்கி தற்போது பலரை தங்களது ரசிகர்களாக மாற்றி கொண்டவர்கள் என்றால் அது பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்கள் அரசியல் மற்றும் அன்றாடம் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை தங்களது நண்பர்களுடன் இணைந்து நகைச்சுவையாக நடித்து அந்த வீடியோவை யூடுப்பில் பதிவிட்டு வருகிறார்கள்.

இவர்களது வீடியோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் இவர்கள் இணையத்தில் பிரபலமானதை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும் இவர்களது நீண்ட நாள் கனவே தனியாக ஒரு படத்தை தயாரித்து இயக்க வேண்டும் என்பது தானாம் இந்நிலையில் அதற்கான பணிகளையும் முயற்சியையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் சுதாகர் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளது இந்த தகவல்கள் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் சுதாகருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் அவர்களது நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் அவரது ரசிகர்களால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here