பொதுவாக அனைவருக்கும் பாடல்கள் மற்றும் இசை என்றால் பிடிக்காமல் இருக்காது சொல்லப்போனால் பல நேரங்களில் நம்மை பல இன்ப துன்பங்களில் நம்மை சந்தோசபடுத்தும் ஒரு உணர்வு என்றால் அது இசையலமைந்த பாடலாகத்தான் இருக்கும். அந்த வகையில் பலரும் இசைபிரியர்களாக இருந்து வருகிறார்கள் இந்நிலையில் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நம்மை தனது இனிமையான குரலால் கட்டிபோட்டவர் பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம். கடந்த 1946-ம் ஆண்டு பிறந்த இவருடைய இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதரத்யுலா பாலசுப்ரமணியம்.

தனது இளம்வயது முதல் சினிமாவில் பின்னணி பாடகராக தன் திரைபயனத்தை தொடங்கிய இவர் பாடகர், நடிகர், இசை இயக்குனர், டிவி அங்கர், டப்பிங் கலைஞர் என பல துறைகளில் தனது திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். மேலும் இவர் தமிழ்,தெலுங்கு. கன்னடம் .ஹிந்தி என பல மொழிப்படங்களில் பாடல்களை பாடி பல்வேறு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து தனது பாடல் திறமையால் அதிக அளவிலான பாடல்களை பாடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். இதுவரையில் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பலமொழிகளில் பாடி பல தேசிய விருதுகளையும் பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

இவரது பாடல்களை பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு பலரது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக இன்றளவும் இவரது பாடல்கள் இருந்து வருகிறது. இவரது திறமையை பாராட்டி இந்திய அளவில் பத்மபூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ போன்ற பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத பிரபலமாக இருந்த எஸ்.பி.பி அவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பலத்த சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் இவரது மறைவு திரையுலகினர் மற்றும் மக்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தியது. அவர் இம்மனுலகை விட்டு பிரிந்த போதிலும் அவரது பாடல்கள் மூலம் இன்றும் பலரது மனதில் தினந்தோறும் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கையில் அவரின் இளமைபருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here