திடீரென ஹாலிவுட் நடிகருடன் கைகோர்த்த பிரபல நடிகை ராதிகா அப்தே ! ரசிகர்கள் ஷாக்

810

கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமடைந்தவர் நடிகை ராதிகா அப்தே. இந்தியில் முன்னனி நடிகையாக வலம் வரும் இவர் இதற்க்கு முன்பே தமிழில் தோணி, வெற்றிசெல்வன் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹிந்தியில் வெளிவரும் பல இணையதள தொடர்களில் அனைத்திலும் இவர் முகம் இல்லாமல் இருக்காது அந்த அளவிற்கு கடந்த வருடம் முழுவதும் பல படங்களிலும் இணையதள தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றார்.. இன்னும் இவர் நடித்த பல படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றன. இவர் எப்பொழுதும் தைரியமான முற்போக்கு சிந்தனையுடைய கருத்துக்களை வெளிப்படுத்துபவர்.

இதற்கு முன்பு இவர் மீது பல விமர்சனங்கள் வந்தாலும் அதை தைரியமாக சமாளித்து இன்றுவரை தன்னை சிறந்த நடிகையாக ரசிகர்களிடையே முன்னிருதிக்கொண்டிருக்கிறார். இவர் மீதான விமர்சனங்கள் பெரும்பாலும் ஆடையின்றி நடிக்கிறார் என்பதுவே, அதையெல்லாம் காதில்கூட போட்டுகொல்லாமல் தான் நடிக்கும் திரைப்படங்களில் தனக்கான பங்களிப்பை முழுதும் வெளிப்படுத்துகிறார் ராதிகா அப்தே.

இவர் கடந்த சில வருடங்களாக தான் காதலித்து வந்த இங்கிலாந் இளைஞரை திருமணம் செய்துகொண்டார். இன்னிலையில் ஹிந்தியில் பெரிதளவும் இவரது இணையதள தொடர்கள் வெற்றிபெற்ற நிலையில் ஆங்கிலத்தில் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க்குடன் புதிய தொடர் ஒன்றில் இணைகிறார். இந்த இணையதள தொடரில் பல ஆங்கில பிரபலங்களும் நடிக்கவிருக்கும் நிலையில் டேவிட் ராபர்ட்ஸ் எனும் நாவலை தழுவி இந்த இணையதள தொடர் இயக்கபடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. படபிடிப்புகள் தொடகியுள்ள நிலையில் இதனை கூடிய விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here