தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை இய்க்குனர் ஆவது என்பது சாதாரணமல்ல அதுவும் எந்த ஒரு பிரபலபலங்களின் பினன்புலமும் இல்லாமல் இயக்குனர் ஆகவேண்டும் என்றால் அது நடக்காத கதை.ஆனால் தற்போதைய சினிமாத்துறை மற்றும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் புதுமுக இயக்குனர்களை அங்கிகரித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவிற்கு வந்தவுடனே அனைத்து இயக்குனர்களும் பிரபலமாவதில்லை. ஆனால் இதை மாற்றும் வகையில் தற்போது இயக்குனர்களின் மத்தியில் புகழின் உச்சியில் உள்ளவர் லோகேஷ் கனகராஜ். கோயம்புத்துரை சேர்ந்தவரான லோகேஷ் முதலில் வங்கியில் பணிபுரிந்து வந்தார்.

அப்போதே குறும்படங்கள் எடுப்பதில் ஆர்வத்தின் காரணமாக நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் எடுத்த காலம் எனும் குறும்படம் பின்னாளில் கார்த்திக் சுப்புராஜால் அவியல் என இயக்கப்பட்டது. இதன்மூலம் இயக்குனரான லோகேஷ் 2017-ம் ஆண்டு முப்பரிமாண கதையம்சம் கொண்ட மாநகரம் எனும் படத்தை எடுத்தார். அவர் எடுத்த முதல் படமே வெற லெவலில் ஹிட்டானதோடு வசுலையும். அதன் பின் கார்த்தியை வைத்து லோகேஷ் எடுத்த கைதி திரைப்படம் இயக்குனர களின் மத்தியில் இவருக்கு தனி இடத்தை பெற்றுக் கொடுத்ததோடு புகழின் உச்சிக்கு செனறது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் இவரை சிறந்த இயக்குனராக கொண்டாடவைத்தது. இவ்வாறு தொடர்ந்து முன்னனி நடிகர்களை வைத்து இயக்கி வரும் லோகேஷ் தற்போது ஒருபடி முன்னே சென்று உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் சூப்பரான கதையை ரஜினிகாந்த மற்றும் கமல் அவரிடம் சொல்லிவிடடதாகவும் இது சூப்பர் ஸ்டாருக்கு 169 படமாக இருக்கப்போகிறது எனவும் இப்படத்தின் தயாரிப்பாளரான கமல் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் கமலின் 66-வது பிறந்தநாளின் போது கமல் தான் இந்த படத்தில் நடிக்கப்போவதாகவும் அதன் மோஷன் போஸ்டரும் வெளியானது. மேலும் இப்படி ஒரு நிலையில் கமலுக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகரும் நடன இயக்குனருமின ராகவா லாரான்ஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவலகள் இணையத்தில் பரவி வருகிறது.மேலும் இப்படத்தில் மொத்தம் ஷுட்டிங் நாட்களே 27 நாட்கள் தானாம்இதற்கு சம்பளமாக 7-கோடி கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படங்களில் ஹீரோவாக நடிக்க 20 கோடி வாங்கி வரும் லாரான்ஸ் எப்படி இதற்கு ஒப்புக்கொண்டார் என சினிமா வட்டாரங்களில் உள்ளவர்கள் கிசுகிசுத்த வண்ணம் உள்ளனர். மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தில் எப்படி மிரட்டியிருந்தாரோ அதைக்காட்டிலும் இருமடங்கு இருக்கும் லாரான்ஸ் அவர்களின் வில்லத்தனம் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here