வெள்ளித்திரையில் தற்போது பல வாரிசு நடிகர் நடிகைகள் திரைபடங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். பெரும்பாலும் வாரிசு நடிகர்கள் தான் பெருமளவு நடித்து வரும் நிலையில் வாரிசு நடிகைகள் அவ்வளவாக சினிமாவில் நடிப்பதில்லை. அப்படியே நடித்தாலும் அவர்கள் ஒரு சில படங்களிலேயே காணமல் பொய் விடுகின்றனர். அந்த வகையில் 80-கலீல் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் அனுராதா. இவர் அந்த காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்ததோடு பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமைகுரியவர். இவ்வாறு பிரபல நடிகையாக இருந்தவரின் மகள் தான் அபிநயா ஸ்ரீ.

இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்த போதிலும் அவ்வளவாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. தளபதி விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து மாபெரும் வெற்றியை அடைந்த திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு இன்றளவும் இந்த படம் மக்களிடையே பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பலர் நடித்திருப்பார்கள். அந்த நிலையில் விஜயை இருவர் காதலித்து வருவார்கள் அதில் ஒன்று தேவயாணி இன்னொருவர் தான் அனுராதா அவர்களின் மகளான அபிநயா ஸ்ரீ. மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இவர் மேற்கொண்டு பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் வராத நிலையில் தற்போது நடன கலைஞராகவும் சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறான நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அபிநயாஸ்ரீ ,பிரண்ட்ஸ் படத்தில் தான் நடித்த அனுபவங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அந்த படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு வயது வெறும் 13 தான். அதிலும் நான் வயதுக்கு வந்து நான்கு ஐந்து மாதங்களிலேயே நான் சினிமாவில் நடிக்க வேண்டியதாக இருந்தது.மேலும் இந்த சமயத்தில் நடிக்க வேண்டாம் என அம்மா தடுத்தார்கள் இருப்பினும் எனக்கு அதில் நடிக்க வேண்டும் என அடம்பிடித்து நான் அதில் நடித்தேன்.

அந்த படத்தில் என்னை பார்த்தால் பெரிய பெண்ணாக இருப்பது போல் தோன்றும். மேலும் பலர் என்னை பார்த்து பெரிய பெண் எனவே நினைத்து வந்தனர் இந்நிலையில் நான் அவர்களிடம் சென்று நான் சின்ன பெண் தான் என கூற விரும்பினேன் ஆனால் நான் அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.  மேற்கொண்டு படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டேன் ஆனால் அது முடியாத நிலையில் தற்போது நடன இயக்குனராக படங்களில் பணியாற்றி வருகிறேன் என கூறியிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here