சினிமாவில் மட்டும் இல்ல நிஜத்திலும் கூட எந்த ஒரு பெண்ணும் தன்னை அசிங்கமாக காட்டுவதை ஏற்றுகொள்ளமாட்டர்கள். அதுவும் பிரபல கதாநாயகியாக இருக்கும் எந்த நடிகையும் இதை செய்ய மறுக்கும் நிலையில் கவுண்டமணி செந்தில் நடித்த காமெடியில் கவுண்டமணியின் தங்கையாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் அடித்து நடித்திருந்தவர் லலிதா குமாரி. 90-களில் முன்னணி நடிகைககளுள் ஒருவராக வலம் வந்தவர் லலிதா.இவர் முதலில் 1987-ம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் த்ரிபத்தின் மூலமே கதாநாயகியாக அறிமுகமானார். 53-வயதான லலிதா நடிகரான சி. எல் ஆனந்தின் மகளும் டிஸ்கோ சாந்தியின் தங்கையும் ஆவார். வெள்ளித்திரையில் தனது நடிப்பு மற்றும் அழகால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

இதன் மூலம் வீடு மனைவி மக்கள்,புது புது அர்த்தங்கள்,புலன் விசாரணை,உலகம் பிறந்தது உனக்காக போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இதுவரை 35 படங்களுக்கு மேல் நடித்துள்ள லலிதா 1994-ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவின் முன்னணி வில்லன் நடிகரும் குணசித்திர நடிகருமான பிரகாஷ்ராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இந்நிலையில் இவரது மகனான சித்து 2004-ம் ஆண்டு உடல்நிலை சரியின்மை காரணமாக இறந்தார். அதன் பின் லலிதாவிருக்கும் பிரகஷ்ராஜிர்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சட்டாபூர்வமாக பிரிந்தனர்.

இதன் பின் சினிமாவை விட்டு விலகி தன் குடும்பத்தை பார்த்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.இவ்வாறான நிலையில் சமீபத்தில் லலிதாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதை பார்த்த அவரது ரசிகர்கள் லலிதா குமாரியா இது என கேட்க்கும் அளவிற்கு ஆலே அடையளாம்  தெரியாமல் மாறி போயிருக்கிறார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு லலிதா பெட்டி ஒன்றில், தொகுப்பாளர் படத்தில் நீங்கள் கவுண்டமணியின் தங்கையாக கருப்பு பெயிண்ட் அடித்துக்கொண்டு நடிதிருபீர்கள் எப்படி அதற்க்கு ஓகே சொன்னிர்கள் என கேட்டார் .

அதற்கு லலிதா, என்னை முதலில் அழகாக காட்டுவதாக தான் சொன்னார்கள்.ஆனால் அசிங்கமாக காட்டுவார்களே என எண்ணி நான் பயத்தில் இருந்தேன்.அதன் பின் என்னை சமாதான படுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தார்கள்.ஆனால் எதை நான் முதலில் நடிக்க மாட்டேன் என சொன்னேனோ அந்த கதாபாத்திரம் தான் என்னை மக்களிடையே பிரபலமாக்கியது. அந்த படத்தின் காட்சியை பார்த்து நீங்கள் தானே அது என கேட்பவர்கள் அதிகம் என கூறி புன்னகைத்தார்.இதன் மூலம் நாம் எப்படி இருகிறமோ என்பதை தங்களது நடிப்பு திறமையே மக்களிடையே நல்ல புகழையும் மக்கள் மனதில் நீங்காத இடத்தையும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here