தமிழ் சினிமா வில் பல முகம் கொண்ட நபராக இருந்து வந்தவர் பாக்கியராஜ் அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குனர், இசையமைப்பாளர் என பல முகம் கொண்டவர்.இவர் தனது சினிமா பயணத்தை 16வயதினிலே படம் மூலம் துணை இயக்குனராக களம் இறங்கினார்.மேலும் நடிகராக புதிய வார்ப்புகள் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

இயக்குனராக இவர் இயக்கிய அணைத்து படங்களும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது.மேலும் இயக்குனர் பாக்கியராஜ் என்றால் நியாபகம் வருவது அந்த முருங்கைக்காய் காட்சிகள் தான்.பாக்கியராஜ் அவர்கள் பல வெற்றி படங்களில் நடித்து அன்றைய ரசிகர்கள் மத்தியில் தன்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் மட்டும் கலக்காமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் கலக்கி வந்துள்ளார்.மேலும் இவர் பிரபல நடிகையான பூர்ணிமா ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் இருகிறார்கள்.இவரது மகனான சாந்தனு அவர்கள் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

மேலும் அவரது மகளான சரண்யா பாக்கியராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் நடித்து வெளியான படமான பாரிஜாதம் மூலம் அறிமுகமாகினார்.பிறகு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் அதன் பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.சரண்யா அவர்கள் வெளிநாட்டில் வாழ் இந்தியர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

அனால் காதல் முறிவு காரணமாக இவர் திரையுலகத்தை விட்டு சற்று தள்ளியே இருந்தார்.அதில் இருந்து மீண்ட சரண்யா தற்போது மேற்படிப்பை படித்து வருகிறார்.மேலும் முதல் காதல் தோல்வி காரணமாக எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.அவரது தந்தை ஆனா பாக்கியராஜ் அவர்கள் எவ்வளவு பணம் இருந்தும் இந்த ஒரு விசயத்தில் கஷ்டமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here