தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வெள்ளித்திரைக்கு அடுத்த படியாக சின்னத்திரையும் தற்போது பல மக்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது.அந்த வகையில் பல தொலைக்காட்சி நிறுவனம் அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு பல புது புது தொடர்கள் மற்றும் நிகழ்சிகளை மக்களுக்கு அளித்து வருகிறார்கள்.அந்த வகையில் பல ஹிட் நிகழ்சிகள் சின்னத்திரை பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறி அதனை பல சீசன் கள் எடுத்து செல்கிறார்கள்.அந்த வகையில் தற்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக நான்காவது சீசன் வருகைக்க மக்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருகிறார்கள்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பல மொழிகளில் நடத்தி இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றதன் காரணமாகவே பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்தது.இதில் என்ன ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் மக்களுக்கு புடிதமான நடிகர்கள் மற்றும் நடிகைகளை அந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நூறு நாட்கள் இருக்கு வைத்து அதில் யார் வெற்றிக்கு தகுதியானவர் என மக்களால் முடிவு செய்து அவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருபவரும் உண்டு மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கு கெட்ட பெயரும் கிடைப்பதும் உண்டு.மேலும் இதில் கலந்து கொண்டால் போதும் அவர்களுக்குதமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கும்.

அந்த வகையில் தற்போது சீசன் 4 காக காத்து வரும் மக்களுக்கு மகிழ்ச்சி வூடும் விதமாக இந்நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் ஒளிபரப்பு ஆகும் என்ற செய்தி இணையத்தில் பரவி வந்தது.மேலும் இதில் கலந்து கொள்ள போகும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களும் வெளியாகி வண்ணம் இருந்து வருகிறது.

தற்போது அந்நிறுவனம் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள்.அந்த வகையில் அதுல்யா ரவி, குக் வித் கோமாளி புகழ், கிரண், கானா காணும் காலங்கள் தொடர் நடிகர் இர்பான் மற்றும் காமெடி நடிகை வித்யு லேகா என இணையத்தில் செய்தியை பரப்பி வருகிறார்கள்.மேலும் இதனை கண்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here