பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று எதிர்பார்ப்புடன் இருந்து வரும் ஒரு நிகழ்ச்சியாகும்.இதை பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் தொகுத்து வழங்கி இந்நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு பளு சேர்த்தது.இந்நிலையில் இதில் போட்டியாளராக பங்கு பெற்று மக்களின் ஆதரவையும் அதே போல் பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்தவர் தான் நடிகை ஜூலி.

ஜூலி அவர்கள் ஜல்லிக்கட்டு போரட்டத்தின் போது மக்களுகாக களம் இறங்கி போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் அந்த பிக் பாஸ்வீட்டிற்குள் சென்ற முதல் நாளில் இருந்தே இவருக்கும் சினிமா பிரபலங்களுக்கும் ஏற்பட்ட சில பல கருத்து வேற்பாடு காரணமாக இவரால் அதிக நாட்கள் அந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாமல் போனது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஜூலி அவர்களுக்கு பல படங்களில் மற்றும் விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்தது.அண்மையில் நடிகை ஜூலி அவர்களுக்கு திருமணம் நடக்க போவதாகவும்.இவர் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

மேலும் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.இதை தொடர்ந்து ஜூலி தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகபூர்வ அறிவிப்பும் வரவில்லை.மேலும் இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் திருமண கோலத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரிடம் உங்களுக்கு திருமணமா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here