பொதுவாக திரையுலகில் இருப்பவர்கள் மீதும் சின்னத்திரையில் இருப்பவர்கள்; மீதும் மீடியா பின்னணியை கொண்டவர்கள் மீதும் கிசு கிசுக்களும் விமர்சனங்களும் வருவது சகஜமான ஓன்று தான். அதுவும் குறிப்பாக இந்த விமர்சனங்களும் சர்ச்சைகளும் இந்த இளம் நடிகர்களின் மீதோ அல்லது வளர்ந்து வரும் நடிகர்களின் மீதோ தான் வரு மென்றால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி இந்த கிசு கிசுக்களை கத்தில் போட்டுகொல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களும் உள்ளனர் இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இப்படி தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பல வெற்றித்திரைப்படங்களாக வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து திரையரங்குகளில் வெளிவர இருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக ஓ டி டி யில் வெளிவர இருக்கும் டேட்டியில் தொடங்கி எனிமி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். புஷ்பா என்ற தெலுங்கு படத்திலும் தற்போது படபிடிப்புகள் சுவாரசியமாக நடந்து வருகிறது.

இப்படி கடந்த வருடத்தில் இவருக்கும் நடிகர் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடன் கஜினி காந்த் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டு தற்போது மகிழ்ச்சியாக மீண்டும் ஜோடியாக படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி கடந்த இரு வருடங்களுக்கு முன்பு இவர் பங்குபெற்று இருந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே பல விமர்சனங்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெண்கு பெற்ற பெண்களில் யாரவது ஒருவரை திருமணம் செய்துகொள்ளவேண்டி இருந்த நிலையில் இறுதியில் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தது பலராலும் பேசப்பட்டது. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனி நாட்டில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்த நிலையில் தன்னை ஆர்யா லாக்டவுன் நேரத்தில் பட வாய்ப்பும் இல்லாததால் பணத்திற்கு கஷ்டப்படுவதால் தன்னை திருமணம் செய்வதாக கூறி 70 லட்சத்து 40,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார் என்றும், பணத்தை பெற்றுக்கொண்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தற்போது திரையுலகில் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here