தற்போது திரைபடங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றாலும் அவர்கள் அவர்களது கதாபாத்திரத்தின் மூலமே மக்களால் அறியபடுகின்றனர். அதை தாண்டி அவர்களது நிஜ பெயரோ அல்லது அவர்களது இயல்பு வாழ்க்கை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரிவதில்லை. அந்த வகையில் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அவன் இவன். இந்த படத்தில் ஜமிந்தராக ஐனஸ் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஜி.எம்.குமார். அந்த படத்தில் இவரை மையமாக வைத்தே கதையும் நகரும்.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே அடையாளம் காணப்பட்டார் ஜி.எம்.குமார். எனினும் இவர் ஆரம்பகாலத்தில் இருந்தே சினிமாத்துறையில் உள்ளார். 198-ம் ஆண்டு சிவாஜி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபு நடிப்பில் வெளியான படம் அறுவடை நாள் இந்த படத்தில் பிரபுவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் இவர் இயக்கி தயாரித்த பல படங்கள் பெரும் தோல்வியை தழுவ பெரும் நஷ்டத்தின் காரணமாக சில காலம் சினிமா பக்கமே வராமல் இருந்தார். அதன் பின் வெயில் படம் தான் இவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது.

அதன் பின் தற்போது தொடர்ந்து படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மலைகோட்டை, மச்சக்காரன், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தாரை தப்பட்டை, சரவணன் இருக்க பயமேன் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.  சமீபத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் கர்ணன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இவர் தனது முதல் படத்தில் தன்னுடன் நடித்த பிரபல நடிகையான பல்லவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல்லவியும் 90-களின் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் கொடிகட்டி பரந்த ஒரு முன்னணி நடிகையாவார். தற்போது அவர் சினிமாவில் அவ்வளவாக நடிப்பதில்லை. இந்நிலையில் இவர்களது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here