தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ நடிகர்கள் நடிகைகைகள் வந்த போதிலும் 90-களின் காலகட்டத்தில் வந்த நடிகர் நடிகைகளுக்கு இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமகத்தான் உள்ளார்கள். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த காலத்து நடிகைகளுக்கு இன்றளவும் தக்னி ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அந்த வகையில் ரேவதி, ஸ்ரீதேவி. ராதா, ரேகா, என பல நடிகைகள் வரிசையில் அப்போதே தனக்கென தனி பாணியையும் ரசிகர்களையும் இன்றளவும் வைத்திருப்பவர் ஊர்வசி. 52-வயதான ஊர்வசியின் இயற்பெயர் கவிதா ரஞ்சினி. இவர் தனது எட்டு வயதிலிருந்தே படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

1977-ம் ஆண்டு மலையாளத்தில் விடருன்ன மொட்டுகள் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஊர்வசி இதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாளத்தில் பிரபலமாக நடித்து வந்த ஊர்வசி தமிழில் 1983-ம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் முந்தானை முடிச்சு படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். இந்த படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஊர்வசி இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழில் பல நடிகர்களுடன் நடித்துள்ள இவர் திரையுலகில் இன்றளவும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி அவர்களுடன் இணைந்து இன்னும் ஒரு படங்களில் கூட நடிக்காமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகிகளிலேயே எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடிக்கக்கூடியவர் ஊர்வசி.  இவரது நடிப்பு மற்றும் காமெடி ரசிகர்களின் மத்தியில் இன்றளவும் வெகு பிரபலம்.  அந்த வகையில் இவ்வளவு பேமசான ஊர்வசி தமிழின் மாஸ் ஹீரோவான ரஜினியும் நகைச்சுவை செய்வதில் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை.

இந்த நிலையில் இவர்கள் இணைந்து நடித்திருந்தால் அந்த படம் வேற லெவலில் இருந்திருக்கும் என அவரது ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் வந்து 38-வருடம் ஆன நிலையில் இன்னும் ஊர்வசி அவர்கள் ரஜினி அவர்களுடன் நடிக்காமல் இருப்பது நம்ப முடியாத ஒன்றாக இருந்தாலும் அது தான் உண்மை. இந்நிலையில் ஊர்வசி தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நகைச்சுவை கதாபாத்திரம் என்றாலும் அதற்கு நேர்மாதிரியான செண்டிமெண்ட் காட்சிகள் என்றாலும் சரி ஊர்வசிக்கு அணைத்தும் கைவந்த கலை. சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் மற்றும் சூரரை போற்று   திரைப்படங்களில் ஊர்வசியின் நடிப்பு சினிமா வட்டாரங்கள் மற்றும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இனி எதாவது வாய்ப்பு கிடைத்தாலாவது இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என அவர்களது ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here