சினிமா திரையுலகை பொருத்தவரை இந்த காலகட்டத்தில் தொடர்ந்து படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருவது என்பது சிரமமான ஒன்று. காரணம் தற்போது பல புதுமுக நடிகைகள் வெள்ளித்திரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் வரும் நடிகைகள் ஒன்று இரண்டு படங்கள் நடித்த பின்னர் அவர்கள் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமாகாத நிலையில் வந்த இடம் தெரியாமல் செல்கின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக இன்றளவும் வலம் வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். இதை  தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு புகழினஉச்சியில் உள்ளார்.

சினிமா துறைக்கு வந்து விட்டாலே நடிகர் ஆனாலும் சரி நடிகைகள் ஆனாலும் வடந்திகளுக்குசரி வதந்திகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் வதந்திகளுக்கு பெயர் போனவர் நயன்தாரா. சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்திருந்த நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டு அது திருமணம் வரை சென்றதாகவும் பின் அது தடைபட்டு போனதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதை தொடர்ந்து பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவுடன் நெருக்கம் ஏற்பட்டு அவருக்காக கையில் பச்சை குத்தி கொண்டதாகவும் மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் பின் இதனால் பிரபுதேவாவின் குடும்பத்தில் பிரச்சனை வரவே இருவரும் பிரிந்துவிட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.

இவ்வாறு பல காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா பல காலம் யாரையும் காதலிக்காமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா அந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டு தற்போது இருவரும் ஒன்றாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.  அடிக்கடி ஒன்றாக வெளிநாடுகளுக்கு பறக்கும் இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இணைய பக்கத்தில் நயன்தாரா தனது கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை  புகைபடம் எடுத்து பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த பலர் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்குமோ என புலம்பி வந்த நிலையில் அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்ட நயன்தாரா அவரது ஆஸ்தான ஜோதிடரின் வாக்கை நம்புகிறார். இதற்கு காரணம் சினிமா உலகில் தான் அடையபோகும் உச்சத்தை அவர் முன்னரே சொன்னதால் நயன்தாரா அவரை பெருமளவில் நம்புகிறார்.

இப்படி இருக்கையில் அந்த ஜோதிடர் நயன்தாராவிற்கு திருமண தோஷம் உள்ளதாகவும் அதனால் பல கோவில்களுக்கு செல்ல வேண்டும் என அவரை வலியுறுத்தியுள்ளார். இதன் காரணமாகத்தான் காளஹஸ்தி, கும்பகோணம் போன்ற பல கோவில்களுக்கு இருவரும் ஒன்றாக சென்று வருகிறார்கள். இந்நிலையில் திருநாகேஸ்வரம் சென்று சிவனை தரிசித்து வந்தால் அவரது திருமண தோஷம் நீங்கி விடும் என ஜோதிடர் கூறவே அவர்கள் செல்லும் நேரத்தில் லாக்டவுன் அறிவித்து விட்ட நேரத்தில் அப்போது செல்ல முடியாத காரணத்தால் தற்போது லாக்டவுன் முடிந்த நிலையில் அந்த கோவிலுக்கு சென்று வந்துள்ளார்கள் இருவரும்.

இப்படி இருக்கையில் இந்த பயணத்தை முடித்து வந்ததும் நயன்தாரா முடிந்து விட்டதாகவும் இனி அவர்களது திருமணத்தில் எந்த தோஷமும் இல்லை என ஜோதிடர் கூறிய நிலையில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா அவர்களின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் அவர்களது தரப்பில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here