தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி. தெலுங்கில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய சுரேகா மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 1998-ல் சாந்தல் என்ற இந்தி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் அதன் பின் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் உத்தமபுத்திரன்,பிரம்மா,தெய்வதிருமகள், ஜில்லா,எதிர்நீச்சல்,மெர்சல்,விஸ்வாசம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் மாஸ்டர் திரைப்படத்திலும் சுரேகா நடித்துள்ளார்.

சமீபத்தில் இணையத்தில் டிரெண்டாக நினைத்து விஜய்யின் ஆக்சன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என வலைத்தளத்தில் பதிவிட்டதன் மூலம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கினார். 43-வயதான சுரேகா தெலுங்கில் பிரபல இயக்குனரான சுரேஷ் தேஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுரேஷ் தேஜா இயக்கிய விளம்பர படஙகள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு அது இருவீட்டார் நிலையில் திருமணத்தில்முடிந்தது.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் 6 மே 2019-ம் ஆண்டு உடல்நிலை காரணமாக சுரேஷ் தேஜா இயற்கை எய்தினார். அதன்பின் தனியாக தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் சுரேகா வாணி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் அதற்கு தனது மகள் மற்றும் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இது குறித்து சுரேகா வாணியிடம் கேட்டபோது,நான் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளபோவதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை.

எனது மகளோ குடும்பத்தினரோ என்னை கட்டாயப்படுத்தவும் இல்லை.இப்போது எனது சினிமா வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.எனக்கு இதுவே போதும் என கூறினார்.இப்போது தான் திருமணத்திற்கு அடித்தளம் போட்டிருப்பார் போலும் சுரேகா வாணி எப்படியும் சில நாட்களில் திருமண செய்தி வந்தாலும் ஆச்சர்ய பட இல்லை. சினிமா வட்டாரங்களில் இல்லை என்றாலே இருக்கு என்று தானே அர்த்தம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here