தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு தற்போது பஞ்சமில்லை எனலாம் அந்த அளவிற்கு பல புதுமுக நடிகைகள் சினிமாவில் பிரபலமாக நடித்து வருகின்றனர். இதிலும் ஒரு சில நடிகைகள் தான் நடிக்கும் முதல் படங்களிலேயே மக்களை கவர்ந்து தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற திரைபடம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் தமிழ் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் வெள்ளாவி பெண்ணான டாப்சி. 32- வயதான டாப்சி ஆரம்பத்தில் தனது கல்லூரி படிப்பை மாடலிங்கின் மீது கொண்ட ஆர்வத்தால் மாடலின் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் விளம்பர படங்களில் பிசியாக இருந்த இவர் 2010-ம் ஆண்டு தெலுங்கில் மாண்டி நாடம் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம்  போன்ற பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். யாவர் தமிழில் வந்தான் வென்றான், காஞ்சனா,ஆரம்பம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து யாவர் ஹிந்தியில் அமிதாப் பச்சனுடன் இணைந்து பிங்க் எனும் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த பிங்க் திரைப்படம் தான் தமிழில் பிரபல முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பில் உருவானது. தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்சி கேம் ஓவர் எனும் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

தற்போது பல படங்களில் நடித்து அவரும் டாப்சியின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. அந்த புகைபடத்தில் பள்ளி உடையில் இருக்கும் டாப்சியை பார்ப்பதற்கு தற்போதைய டாப்சியா அது என்னும் அளவிற்கு உள்ளது அவரது ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here