திரைப்படங்களில் நடிப்பதற்கு நிறம் முக்கியம் இல்லை திறமையும் நடிப்பும்தான் முக்கியம் என்பதை அடையாளம் காட்டியதோடு தென்னிந்திய சினிமாவில் அந்த கால கட்டத்தில் இருந்து இன்று வரை மக்கள் மனதிலும் நடிகர்கள் மத்தியிலும் முன்னணி நடிகனாகவும் பிரபலமாகவும் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இவரை பிடிக்காதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு சிறுவயதினர் முதல் பெரியவர்கள் அனைவரும் இவரது நடிப்புக்கும் ஸ்டைலுக்கும் மிகபெரிய ரசிகர்கள். தற்போது தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் வயது நடிகர்கள் வந்த போதிலும் தனக்கான இடத்தை இன்றளவும் நீங்காமல் வைத்திருப்பவர் ரஜினி அவர்கள்.

இந்த நிலையில் இவர் நடித்த அணைத்து படங்களுமே மக்களிடையே வெகு பிரபலம் இப்படி இருக்கையில் பிரபல இயக்குனர் இயக்கத்தில் ரஜினி கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைபடம் பாட்சா. இந்த படம் இன்றளவும் சினிமா வட்டாரங்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.அந்த வகையில் இந்த படம் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம். இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினி இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மாணிக்கமாகவும் பாஷாவாகவும் மாறி மாறி நடித்திருப்பார்.

இதில் மாணிக்கம் கதாபாத்திரத்தில் இவரது தம்பியாக போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர் ஷாஷி குமார். இவர் கன்னட மொழி நடிகராவார்.இவர் கன்னடத்தில் முதன் முதலாக 1988-ம் ஆண்டு வெளியான சிரஞ்சீவி சுதாகார எனும் படத்தில் வில்லனாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறான நிலையில் இவருக்கு எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டு பல காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

பின்னர் இவர்  சினிமாவை விட்டு அரசியலில் களம் புகுந்தார். பிரபல முன்னணி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் இணைந்து பதவியில் அமர்ந்தார். தற்போது சினிமாவை முற்றிலும் விலகி அரசியலில் முளிகவனத்தையும் செலுத்தி வருகிறார்.  இந்நிலையில் இவரது ஆரம்ப கால புகைப்படங்கள் இனையத்தில் வெளியாகி வைராலாகி வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here