வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது எனலாம். அந்த அளவிற்கு மக்கள் மனதில் பெருமளவு வரவேற்பை பெற்று ரியாலிட்டி நிகழ்ச்சிகள். அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு உள்ளதோடு இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்களே இல்லை எனலாம். காரணம் இந்த நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்களும் அவர்களை பற்றிய உண்மை நிலையை காட்டும் விதமும் இந்த நிகழ்ச்சி வெற்றியடைய காரணம். தற்போது இந்த நிகழ்ச்சி தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஐந்தாவது சீசனில் காலடி வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னடத்தில் இது வரை சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ள நிலையில் கன்னட பிக்பாஸ் நடிகை ஒருவர் விபரிதமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கன்னடத்தில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபல நடிகை சைத்ரா. இவர் கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 27-வயதான ஆரம்பத்தில் கதை எழுத்தாளராக தன் பயணத்தை தொடங்கி படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது பிரபல நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.

இவ்வாறான நிலையில் தான் இவருக்கு பிக்பாசில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கபெற்றது. இவ்வாறு வெகு பிரபலமாக இருக்கும் இவர் கடந்த மாதம் நாகர்ஜுனன் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும் அதன் பின்னரே இவர்கள் செய்து கொண்டதாகவும் மணமகன் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லையாம். இதனால் மனரீதியாக அதிகமாக சைத்ரா பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் தனது வீட்டில் தனியாக இருந்த நிலையில் பினாயிலை எடுத்து குடித்து விபரிதமான செயலுக்கு சென்றுள்ளார்.

இதை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு பின் தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூறித்து அவரது தந்தை கூறுகையில்,கடந்த சில நாட்களாக அவர் நிறைய மன உளைச்சலுக்கு ஆளானர். இதன் பின்னர் இந்த முடிவை எடுத்து தவறான செயலை செய்துள்ள இவர் வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு பாடத்தை கற்று கொண்டுள்ளார். மேலும் இது போன்ற அவசர முடிவை இனி எப்போதும் எடுக்க மாட்டார். இனிமேல் அவர் தனது எழுத்து வேலைகளில் கவனம் செலுத்துவார் என உறுதியளித்துள்ளார். இனி என் மகளின் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கிறேன் என மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here