பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் புது புது நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் விஜய் தொலைகாட்சியில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர்.அந்த வகையில் கடந்த நான்கு சீசன்னாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்ப வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாத்திமா பாபு. நடிகை, தொகுப்பாளர், செய்திவாசிப்பாளர் என பன்முகம் திறைமை கொண்டவர் பாத்திமா பாபு. இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு 25 ஆண்டகளுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள பல செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கல்கி என்ற திரைபடத்தின் முலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த இவர் சன் தொலைகாட்சியில் லட்சுமி மற்றும் ஜி தமிழ் தொலைகாட்சியில் யாரடி நீ மோகினி என்னும் தொடரில் நடித்து வந்துள்ளார்.

இவர் பிக்பாஸ் யின் பிரபலமடைந்த இவர் தற்போது விஜய் தொலைகாட்சியில் பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் இவர் திடீர் உடல் நல குறைவால் பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுளர்.

அவசர சிகிச்சை பிரிவில்இவர் ஏற்கனவே கோரோனாவால் பாதிக்கப்பட்டதும் அதற்காக அவர் போராடி வெறும் நான்கே நாட்களில் சரி செய்ததும் அவரே யூடுப் பக்கத்தில் குறிப்பிட்டு விதி ஒன்றை வெளியிட்டார். மேலும் மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக கல் இருப்பதாகவும் அதனை சர்ஜரி மூலம் அகற்றி தற்போது நலமுடன் இருபதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த தகவல் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here