தமிழ் சினிமாவில் பொருத்தவரை எத்தனையோ சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் உள்ளனர். இவர்கள் என்னதான் பல படங்களில் நடித்தாலும் இவர்களுக்கான வரவேற்பு மக்களிடையே பெருமளவு கிடைப்பதில்லை. அந்த வகையில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை பல படங்களில் காமெடி நடிகர்களுக்கு துணையாக நடித்து வருபவர் கிரேன் மனோகர். பிரபல இயக்குனர் சிகரம் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் மூலம் திரையுலகிற்கு அறிமுகபடுதபட்டவர் தான் கிரேன் மனோகர். ஒவ்வொரு நடிகருக்கு கண்டிப்பாக ஒரு அடைமொழி இருக்கும் அந்த வகையில் இவருக்கு கிரேன் மனோகர் என பெயர் வர காரணம் இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் வரை சினிமா படபிடிப்பு தளங்களில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

அதன் பின்னரே சினிமாவில் நடிக்க வாய்ப்பு பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் வகைபுயல் வடிவேல் அவர்களுடன் இணைந்து நடித்து இவர்களது காமெடி ஹிட்டாகவே தொடர்ந்து இவர் வடிவேல் அவர்களுடன் அணைத்து படங்களிலும் இடம்பெற ஆரம்பித்தார். இவரது காமெடி மட்டுமில்லாமல் குணசித்திர நடிப்பும் மக்கள் மத்தியில் பிரபலமாக இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து கலக்கி இருக்கிறார். இந்நிலையில் இது கூறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கிரேன் மனோகர், முன்பெல்லாம் பெரிய படங்களில் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது.அதிலும் வடிவேல் அவர்கள் அந்த படத்தில் நடிக்கிறார் என்றால் நிச்சயம் அதில் நானும் இருப்பேன்.

இப்படி ஒரு நிலையில் அவர் சினிமாவை விட்டு விலகியதும் எனக்கும் பட வாய்ப்புகள் கணிசமாக குறைந்தது. மேலும் புதுமுக இயக்குனர்கள் மற்றும் பெயர் தெரியாத படங்களிலும் குறும் படங்களிலும் நடித்து வந்தேன் தற்போது அதிலும் நடிக்க வாய்ப்பு வராத நிலையில் மிகவும் சிரமத்தில் உள்ளேன். நான் வடிவேலுடன் இருந்த போது எங்களுக்கு என்று ஒரு காமெடி டீம் இருந்தது. எந்த படம் என்றாலும் அந்த டீம் அப்படியே அந்த படத்தில் இருக்கும் இவ்வாறான நிலையில் வடிவேலு அவர்கள் இல்லாத நிலையில் மீண்டும் அந்த டீமை நான் உருவாக்கலாமா என நினைத்திருக்கிறேன்.

இருப்பினும் அப்படி எதாவது செய்தால் தப்பாகிவிடும் என நினைத்து அதை அப்படியே விட்டு விட்டேன். மேலும் சில சிறு நடிகர்கள் தற்போது பெரிய காமெடி நடிகர்களாக மாறிவிட்டனர் இவர்களால் தான் எனக்கு பட வாய்ப்புகள் வருவது இல்லை என என்னை பலர் கேட்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை அவரவர்க்கு திறமைக்கு ஏற்றாற்போல் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும் என கூறியிருந்தார்.இப்படி ஒரு நிலையில் காமெடியனாக நடித்து வந்த மனோகர் தற்போது நடிப்பின் வேறு பரிணாமத்திற்கு சென்றுள்ளார்.

தற்போது இரண்டு மனம் வேண்டும் எனும் திரைபடத்தில் நடித்து வரும் மனோகர் முதல் பாதியில் காமெடி நடிகராகவும் இரண்டாவது பாதியில் குணசித்திர வேடத்தில் கண்கலங்க வைக்கும் காட்சிகளில் நடித்து கலக்கி அங்கு இருந்த படபிடிப்பு குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பல வருடங்களாக சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு இந்த படம் ஒரு நல்ல மாற்றத்தை கொடுப்பதோடு பல பட வாய்ப்புகளை பெற்று தரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here