தமிழ் சினிமாவில் பொறுத்தவரை தற்பொழுது காமெடி நடிகர்களுக்கு பஞ்சமில்லை எனலாம். காரணம் தற்போது பல இளைஞர்கள் தங்களது நகைச்சுவை திறமையினால் சினிமாவில் பெரிதளவில் வாய்ப்புகள் கிடைக்கபெற்று நடித்து வருகின்றனர். மேலும் அவர்களை திரையுலகிற்கு அடையாளம் காண்பிப்பதற்கு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பல்வேறு சோசியல் மீடியா செயலிகளும் உள்ளது. ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிப்பது என்பதே இயலாத ஒன்றாக இருந்தது. இவ்வாறான நிலையில் எந்த ஒரு சினிமா பிரபலத்தின் துணையில்லாமல் தனது திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து திரையுலகில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர்கள் பலர்.

அவர்கள் வரிசையில் முதலில் சின்னத்திரையில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதன் பின் தனது இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவையான பேச்சால் மக்கள் மனதில் பெரிதளவில் இடம்பிடித்து இதன் மூலம் வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமானவர் சுருளி மனோகர். தனக்கு கொடுக்கப்படும் சிறு கதாபாத்திரங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இதன் மூலம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள சுருளி மனோகர் ஒரு நிலையில் சினிமாவில் வளர்ந்து இயக்குனராக உருவெடுத்தார்.

இந்த வகையில் இவரை சினிமாவிற்கு அறிமுகபடுத்தியது என்னவோ வைகைபுயல் வடிவேலு அவர்கள் தான். இயற்கை, கில்லி, ஈ, சுறா, படிக்காதவன், தோரணை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தனது சக நடிகர்களான கிங்காங், போண்டாமணி, மனோபாலா, குண்டு கல்யாணம், அல்வா வாசு, ஜெய்கணேஷ் போன்ற காமெடி நடிகர்களை மையமாக வைத்து இயக்குனர் எனும் படத்தை இயக்க இருந்தார் சுருளி மனோகர். மேலும் அந்த படம் சில காரணங்களால் மக்கள் மத்தியில் பிரபலமடையாத நிலையில் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியாமல் போனது.

இவ்வாறான நிலையில் சுருளி மனோகர் உடல்நிலை குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சைக்கு பின் புற்றுநோய் என தெரியவே பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த சுருளி மனோகர் ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தினார். சினிமாவிற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருந்த இவரது இறுதி அஞ்சலிக்கு சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு நடிகர்கூட வராதது அவரது குடும்பத்திற்கு பெரும் சோகத்தையும் கோபத்தையும் உண்டாக்கியது. இப்படியான நிலையில் இந்த ஒரு நிலை எந்த நடிகருக்கும் வரகூடாது என பலர் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here