பொதுவாக ஒருவர் பிரபலமாக வேண்டும் என்றால் ஒன்று சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ நடிக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டும் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களாக இருக்க முடியும். ஆனால் அதை முற்றிலும் மாற்றியுள்ளது தற்போதைய காலம் எனலாம் அந்த அளவிற்கு ஒருவரிடம் மொபைல் மட்டும் இருந்தாலே போதும் அவர் எளிதில் பிரபலம் ஆகி விடலாம் என்ற அளவிற்கு தற்போது நிலைமை மாறியுள்ளது. அந்த அளவிற்கு மொபைலில் வரும் டிக்டாக் மற்றும் ரீல்ஸ் போன்ற பல வீடியோ ஆப்களால் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் பலர் தற்போது பிரபலமாக இருப்பதோடு இதன் மூலம் பலர் திரையுலகில் பல படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

இந்த வகையில் இந்த ஆப்களின் மூலம் பல வீடியோக்களின் வெளியிட்டு ஆரம்பத்தில் தொடர்ந்து மக்களிடம் நெகடிவ் கமெண்டுகளையும் பல விதமான விமர்சனங்களையும் வாங்கி வந்தவர் தான் பிரபல டிக்டாக் ஸ்டார் ஜி.பி முத்து. அதிலும் இவரும் ரவுடி பேபி சூர்யாவும் சேர்ந்து செய்த பல சேட்டைகளுக்கு இவரை நெட்டிசன்கள் கழுவி ஊத்தி தள்ளி விட்டனர் எனலாம். இருப்பினும் இத்தனை சோதனைகளையும் கடந்து தனது பலம் வெகுளித்தனம் தான் என்பதை கண்டுபிடித்து அதனை மையமாக வைத்து பல காமெடித்தனமான வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் தற்போது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு புகழின் உச்சியில் உள்ளார் ஜி.பி.முத்து.

மேலும் யூடுப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தன்னை கலாயித்து வரும் கடிதங்களை படித்து காட்டி பலரை சந்தோஷ படுத்தி வருகிறார். இந்நிலையில் இவரது புகழ் தற்போது மக்கள் மத்தியில் வெகுவாக பரவிய நிலையில் இவர் தற்போது சின்னத்திரையில் நுழைய உள்ளாராம். இதற்கு அடித்தளம் போடுவது போல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜய் டிவி பிரபலங்கள் பலர் இவருடன் வீடியோ காலில் பேசியது அனைவரும் அறிந்ததே.

சோழியும் குடுமியும் சும்மாவா ஆடும் என்பது போல் அவர்கள் பேசியதற்கு காரணம் இவர் விஜய் டிவியில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறாராம். அதுவும் அந்த நிகழ்ச்சி என்ன தெரியுமா கடந்த இரண்டு வருடமாக பலத்த வரவேற்பை பெற்றதோடு முதன்மை நிகழ்ச்சியாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தானாம். தற்போது இரண்டு சீசன் முடிந்து மூன்றாவது சீசன் தொடங்க உள்ள நிலையில் அதில் கோமாளியாக இவரை போடலாம் என முடிவெடுத்து உள்ளனராம் குழுவினர். அப்ப செத்த பயலே நார பயலேவா அங்கயும் பாக்கலாம் போல எப்படியோ இவரது பல கஷ்டங்களுக்கு விடுவு வந்து விட்டது. அப்பறம் என்ன விஜய் டிவி போன அண்ணே செட்டி தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here