தமிழ் திரையுலகில் 90-களின் காலகட்டத்தில் இருந்து இன்று வரை முன்னணி நடிகராக வலம் வருவது என்பது இயலாத ஒன்றான நிலையில் இன்றும் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள். தனது இயல்பான நடிப்பு மற்றும் ஸ்டைலால் தனக்கென தனி ரசிகர் பட்டளாத்தையே வைத்திருப்பவர். இவர் நடிக்கும் படங்களுக்கு இன்றும் ரசிகர்கள் பெருமளவு வரவேற்பை கொடுத்து வரும் வகையில் இப்போதே அவ்வளவு பிரபலமாக இருக்கும் இவர் அந்த கால கட்டத்தில் எவ்வளவு பிரபலமாக இருந்திருப்பார்கள். அந்த அளவிற்கு அந்த காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் வேறலேவல் ஹிட்டானது.

அந்த வகையில் பிரபல இயக்குனர் கே .எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை அடைந்த திரைப்படம் படையப்பா. இந்த திரைப்படம் ரஜினி அவர்களின் நடிப்பிற்கு இன்னுமொரு திருப்புமுனையாக அமைந்தது.இந்த படத்தில் சிவாஜி கணேசன். லக்ஷ்மி, அப்பாஸ், சௌந்தர்யா, நாசர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இருப்பினும் இந்த படத்தில் ரஜினி அவர்களை மிஞ்சும் அளவிற்கு நடித்து கலக்கியவர் நீலாம்பரி எனும் ரம்யா கிருஷ்ணன் அவர்கள்.

இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர யார் நடித்திருந்தாலும் சரியாக இருந்திருக்காது என்னும் அளவிற்கு இருக்கும் அவரது நடிப்பு. தனது மிடுக்கான நடை, ஸ்டைல், கெத்து ஆன பேச்சு மற்றும் மிரட்டலான வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டியிருப்பார். மேலும் இந்த படம் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு திரைத்துறையில் பட வாய்ப்புகள் வருவதற்கு முன்னோடியாக இருந்தது. இதற்கு முன் ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் இன்றளவும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

இவருக்கு இவ்வளவு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்த இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது முதலில் ரம்யா கிருஷ்ணன் இல்லையாம். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது பிரபல நடிகை சிம்ரன் தானாம். இவருக்கு அந்த சமயத்தில் பல பட வாய்ப்புகள் இருப்புகள் இருந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க மறுக்கவே அதன் பின்னரே ரம்யா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here