தமிழ் திரைப்படங்களில் வில்லன்கள் என்றாலே அந்த காலத்தில் நமக்கு நியாபகம் வருபவர்கள் நம்பியார், எம்,எஸ், வீரப்பன், நாசர், ராதாரவி என தொடங்கி இன்றளவு வரை பல நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கி வருகின்றனர். இந்த வகையில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்றாலே ஒரு தனி தைரியம் வேண்டும். அந்த வகையில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் பிரபல முன்னணி  வில்லன் நடிகர் செந்தாமரை.

இவரை யாரும் அவ்வளவாக மறந்திருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு அதிகளவு ரஜினி படங்களில் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் இவர் தான் நடித்து இருப்பார்.  அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாபெரும் வெற்றிப்படமான மூன்று முகம் படத்தில் ரஜினிக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார். இதை தொடர்ந்து பல படங்களில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும் இவர் நேரடியாக திரையுலகில் நுழைந்தவர் இல்லை. மக்கள் திலகம் எம்,ஜி,ஆர், மற்றும் செவலியா சிவாஜி அவர்களுடன் மேடை நாடங்களில் நடித்து மேலும் அவர்களின் உதவியுடன் திரைப்படங்களில் அறிமுகமானவர்.

இவ்வாறு அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி இவர் திரையுலகில் பிரபலமாக இருந்த தருணத்திலேயே உடல்நிலைகுறைவு காரணமாக காலமானார்.  மேலும் இவரது மனைவியான கௌசல்யாவும் ஒரு திரைப்பட நடிகையாவார். மேலும் இவர் பல படங்களில் அம்மா மற்றும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது 72-வயதாகும் இவர் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் பூவே பூச்சுடவா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவர் அந்த தொடரில் தனது கணவருக்கு சற்றும் நடிப்பில் சளைத்தவர் இல்லை என்பது போல் வில்லத்தனத்தில் கலக்கி வருகிறார். மேலும் இவர் பல தொடர்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். பிரபல வில்லன் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவி யாரென தெரியாமல் சமீபத்தில் இவர்களது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here