தமிழ் சினிமாவில் ஒரு சில சமயங்களில் பெரிய பொருட்செலவில் முன்னணி நடிகர்களை வைத்து எடுக்கும் படங்கள் கூட தோல்வியடைகின்றன. மேலும் அதே வகையில் குறைந்த பொருட்செலவில் புதுமுக நடிகர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் பெருமளவில் வெற்றி பெறுவதோடு மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்படுகின்றன. இதற்கு காரணம் அந்த படத்தின் கதையம்சமும் அதில் வரும்  கதாபாத்திரங்களும்  இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக அமைகிறது. இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற நகைச்சுவை திரைப்படம் முன்டாசுபட்டி.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு முழுநீள காமெடி படமாக இருந்தது. ஒரு கிராமத்தில் இருக்கும் கதையை வைத்தே இந்த படம் முழுவதும் நகரும்.இந்த படம் மக்கள் பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் ஜோடி மீண்டும் இணைந்தது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் மாபெரும் வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற படம் ராட்சசன். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா என்னும் அளவிற்கு இருந்தது இந்த படம். பொதுவாக தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஆனால் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கே பெருமளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதற்கு தகுந்தாற்போல் அந்த கதாபாத்திரமும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. ஒரு அக்சன் த்ரில்லர் படமாக அமைந்த இந்த படத்தில் வில்லனாக கிறிஸ்டோபர் எனும் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் இந்த படத்தின் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் படத்தில் வில்லத்தனத்தில் மற்றும் அதன் தோற்றத்தில் மிரட்டியது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் யார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்து இருந்தனர். இத காரணமாக ரசியகர்கள் அவர் யார் என தெரியாமல் புலம்பி வந்தனர். இந்நிலையில் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்த நிலையில் அவர் யார் என படக்குழுவினர் வெளியிட்டனர்.

அதே போல் இளைஞனாக வரும் கிறிஸ்டோபர் எந்த அளவுக்கு பிரபலமோ அதை காட்டிலும் சிறுவயதில் வரும் கிறிஸ்டோபர் கதாபாத்திரமும் வெகு பிரபலம். அந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் யார் என்பது சமீபத்தில் வெளியாகியுள்ளது. சிறுவயது கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர் யாசர். சேலத்தை சேர்ந்த இவர் சென்னையில் பகுதி நேர வேலை செய்து கொண்டே தன் படிப்பை தொடர்ந்து வருகிறார்.

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் தொடரிலும் நடித்துள்ளார். மேலும் இவர் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் ராட்சசன் படத்தில் உதவி இயக்குனராக இருக்கும் சலீம் என்பவரின் மூலம் இந்த படத்தில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here