தென்னிந்திய சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் பல வெற்றி படங்களில் ஹீரோயின்களாக  நடிப்பதோடு நடித்த முதல் படங்களிலேயே மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமடைவதோடு தனக்கென தனி ஒரு அடையாளத்தை எளிதில் ஏற்படுத்தி கொள்கிறார்கள். இருப்பினும் இவர்கள் ஒரு சில படங்களிலேயே கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கபெற்று அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலை தான் பெரும்பாலும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பல புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ரேணிகுண்டா.

இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் மக்கள் மத்தியில் அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்களே இருப்பினும் தங்களது நடிப்பு திறமையால் இந்த ஒரு படத்திலேயே பெரிதளவில் பிரபலமாகினர். அந்த வகையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சணுஷ்கா. இவர் தனது ஐந்து வயது முதலே திரையுலகில் பல படங்களில் நடித்து வருகிறார் மேலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தமிழில் கடந்த 2011-ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து பீமா படத்தில் த்ரிஷாவின் தங்கையாக நடித்திருந்தார் .

இவ்வாறு தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் கடந்த 2009-ம் ஆண்டு ரேணிகுண்டா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை அடுத்து இவருக்கு அவ்வளவாக ஹீரோயின் வாய்ப்புகள் சரிவர வரவில்லை. இதனால் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் அந்த வகையில் கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் தங்கைகளில் ஒருவராக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சசிகுமாரின் கோடி வீரன் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார்.

இதன் பின் அவ்வளவாக தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கில் புகுந்த அம்மிணி அங்கும் வரவேற்பு கிடைக்காத நிலையில் தவறான முடிவுக்கு ஆளானர் என பல தகவல்கள் வெளிவந்தது. இப்படி இருக்கையில் தனது சகோதரனுக்காக அதை மீண்டும் செய்யமாட்டேன் என கூறிய நிலையில் பருத்து குண்டாக இருந்த சணுஷ்கா பலவிதமான உருவகேலிக்கு ஆளானர். இந்நிலையில் சமீபகாலமாக தனது உடல் எடையை குறைத்து ஆளே வேற லெவலில் மாறிபோயிருக்கும் அம்மிணி அவ்வபோது போட்டோ சூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மலையாள அட்டைபடம் ஒன்றிற்கு செம மாடர்னாக சட்டையில் பட்டன் போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்து அவரது ரசிகர்களை சனுஷாவா இது எனும் அளவிற்கு வாயடைத்து போக செய்துள்ளார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here